ஆசையை ஒழி
******************
பேராசை என்னும் பேயிடமிருந்து விடுபட்டால் மட்டுமே பரம்பொருளைக் காண இயலும். பேராசை அகன்றால்தான் மன ஓட்டம் நிற்கும். மனம் சலனமடையாமல் இருந்தால்தான் உன் ஆன்மாவின் வடிவம் தெரியும். உன் ஆன்மாவை நீ அறிய, உணர, முதலில் ஆசையை வேரோடு கிள்ளி எறிந்துவிட்டு மனத்தைச் சலனமற்ற நிலயில் நிறுத்தி வைத்தல் வேண்டும். அப்புறம் நீ விரும்பியன (நியாயமானவை) எல்லாம் சித்தியாகும். மற்ற வழிகளில் மனதை அலைய விடாதே! உன் வழியே சிறந்தது என முடிவுசெய்து அதிலிருந்து பிறழாதே. ஆசைப் பேயிடமிருந்து விடுபட ஏட்டுக் கல்வி பயன்படாது. மனவோட்டங்களை நிறுத்தும் ஞானவழியே போதும்.
Thursday, December 27, 2007
ஆசையை ஒழி
Posted by ஞானவெட்டியான் at 4:40 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment