Thursday, December 27, 2007

குருவை நம்பு

குருவை நம்பு
*****************
நீ மெய்ப்பொருளை அடைய வேண்டுமாயின் உன் ஞான ஆசிரியனை (குரு) கடவுளாக எண்ணி முழுமையாகவும், சத்தியமாகவும் நம்பு. குரு பயிற்றுவித்த மந்திரத்தைக் கடவுள் கொடுத்ததாக நம்பு. பயிற்றுவித்த மந்திரத்தை இடைவிடாது உதடு பிரியாதபடி ஓதுவாயாக.

அப்போதுதான் நீ, யோகிகளில் சிறந்த யோகியாகவும்,
ஞானிகளில் சிறந்த ஞான சூரியனாகவும் விளங்குவாய். குருவாக்கை
நம்பியவர்களுக்கு, இவ்வுலகில் அடையமுடியாதது, சாதிக்க முடியாதது என்பது எதுமில்லை. குருவாகிய கடவுளை நம்பினால் நீயும் அவனாகிறாய். கடவுளை அறிந்தவன் கடவுள் ஆவான்.

குரு வேறு; தெய்வம் வேறு எனும் எண்ணம் உன்னுள் எழக்கூடாது. பயிற்றுவித்த மந்திரம் வேதங்களின் சாரம். அது உன்னை மெய்ப்பொருளோடு இறண்டறக் கலக்கும்படி செய்துவிடும்.

குரு, மந்திரம், கடவுள் ஆகிய மூன்றும் ஒன்றேதான். மூன்றும் முடிவான ஒரே பொருளாகிய பிரமம். ஆகவே, குருவிடம் சிரத்தையுடன் கூடிய பக்தி இருக்குமாயின், இனி பிறவிப் பிணி உனக்கில்லை. நீ நித்தியத்திற்காகவே படைக்கப் பட்டவன் அந்நிலையை அடைவாய். குருவை நம்பிவிடு.

1 Comment:

Anonymous said...

>குரு, மந்திரம், கடவுள் ஆகிய மூன்றும் ஒன்றேதான். மூன்றும் முடிவான ஒரே
>பொருளாகிய பிரமம். ஆகவே, குருவிடம் சிரத்தையுடன் கூடிய பக்தி
ஆம் ஐயா! குருதான் பிரம்மன், குருதான் விஷ்ணு, குருதான் சிவன்..குருவே பரப்பிரம்மம்..அவனே அனைத்தும் ஆகும். அத்தகை குருவை பணிந்து வணங்குகிறேன்.