Thursday, December 27, 2007

கவலைகளை மறந்துவிடு

கவலைகளை மறந்துவிடு
****************************
உன்னை அறிந்து நீ உய்யவேண்டிச் செய்யும் சாதனைகளாலும், பயிற்சிகளாலும் உன் உடலே போனாலும் போகட்டும். "காயமே இது பொய்யடா". தன்னை அறியாது உடலை மட்டும் அறுசுவை உண்டிகளைத் தின்று, உலகாயத சுகங்களை அநுபவித்து
வளர்த்தல் ஏன்? அப்படி வளர்ந்த உடல் பூமிக்குப் பாரம்தானே? தன்னை அறியும் ஞானப்பாட்டைக்கு வந்தபின் இவ்வுடலைப் பற்றியும், உலகில் உள்ள சுற்றத்தாரையும் பற்றி உனக்குக் கவலை ஏன்?

மாயா உலகைக் கனவென முழுவதும் நம்பி உறுதியாய் நினைத்து விடு. கனவை மெய் என நீ நினைத்தால் உனக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வேறுபாடு? சீவ முத்தீ அடைய ஆசை இருந்தால் மட்டும் போதாது. மாயா உலகைக் கனவென நினத்துக் காண்பவனால்தான் சீவன் முத்தி அடைய முடியும்.

உலகைப் பற்றிய கவலைகளை முற்றிலும் விடு. அதைப் படைத்தவன் அதைப் பார்த்துக் கொள்வான்.

எனவே, கவலையை மறந்தவனால் மட்டுமே இறைவனை உணர இயலும்.

0 Comments: