Thursday, December 27, 2007

நீயே இறைவன்

நீயே இறைவன்
******************
நீ முதலில் இறைவனில் ஒரு சிறு துகளாய் இருந்தாய். கடல் நீர் ஆவியாகி, பின்னர் மழையாகப் பூமிக்கு வருவதைப்போல், நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே முடிவில் செல்லப் போகிறாய்.

உலகின் நலனுக்காக இறைவன் சலனப்பட்டதன்
விளைவாக, நீ சீவானாகி உடலெடுத்து வந்தாய்.

முடிவில் நீ, எங்கிருந்து
வந்தாயோ, அவ்விடத்திற்கே சென்று இறையுடன் கலக்கத்தான் வேண்டும்.

அதற்குத்தான் நீ உன்னை அறிய வேண்டும்.

உண்மையில் உனக்கும் இறைவனுக்கும்
எந்த ஒரு வேறுபாடும் இல்லை. ஆனால் உன் செயல்களாகிய வினைகளால் நீ இறைவனுடன் கலப்பதைத் தடை செய்து கொள்ளுகிறாய்.

உன்னையறிந்தால் நீயே
இறைவன்.

0 Comments: