அன்னையை நாடு
*********************
உன்னிடம் உள்ள அன்பு முழுவதையும் அன்னையிடம் செலுத்து. எதையும் அவளிடிமிருந்து எதிர்பாராதே. எதையும் நாடி தேவியிடம் செல்லாதே. அன்னையின் உருவே அன்பாகும். அன்பின் வடிவாக அவளை நினைந்து வழிபடு. அன்பற்றவன் அவளை அணுக முடியாது. தன் பொருளனைத்தையும் செலவழித்து பூசைகள் செய்தாலும் அன்னை மனமிரங்கமாட்டாள். அன்பிலையெனில் அனைத்தும் பாழ். அன்னை, உன்னிடமிருக்கும் அன்பைக் கேட்கிறாள். அதைத்தராது மற்றவற்றைக் கொடுத்து அவளை நீ ஏய்க்கப்பார்கிறாய். அது உன்னால் முடியாது. அன்னையே பெரிய மாயை. அவளின் மாபெரும் சக்திக்குமுன் உன் ஏமாற்றும் சிந்தனைகள், மாயாஜால வித்தைகள் எதுவும் பலிக்காது.
உன் அறிவிற்கும் அறிவான தெய்வத்தை மன்றாடி வேண்டிக்கொள். அன்னை மன்னித்து விடுவாள். அவள் அன்பே உருவானவள். உன் அசட்டுத்தனத்தைப் போக்கிக் காப்பாள். உலகில் நீ எவரையும் ஏமாற்ற இயலாது. எல்லோரின் அறிவிற்கும் அறிவான அன்னை இல்லாத இடமேயில்லை. அவளே அனைத்தும் ஆவாள். அவளை ஏய்க்க
நினைப்பது உன்னை நீயே ஏமாற்றிக் கொளவதாம். ஆகவே, உன் வேலையெல்லாம் அன்னையை முழுமையாக நம்பி, அவளிடமும் மற்ற சீவராசிகளிடமும் அன்பைச் செலுத்துதல் மட்டுமே. அதுவே உன் குறிக்கோளாய் இருக்கட்டும். காப்பது அவள் செயல்.
Thursday, December 27, 2007
அன்னையை நாடு
Posted by ஞானவெட்டியான் at 4:36 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment