சுயநலம்
*************
உன்னிடம் இருக்கும் சுயநலம் என்று ஒழியுமோ அன்றுதான் நீ உண்மையான அன்பை உணரமுடியும். அப்பொழுதுதான் உண்மை அன்பை பிறரிடம் செலுத்த முடியும்.
அஞ்ஞானம் உள்ளவரை மெய்யன்பை உணரவியலாது. பந்தமும் பற்றும் அன்பின் வளர்ச்சிக்கு எதிரிகள். பற்றற்ற நிலையில்தான் உண்மையான அன்பை உணர்ந்து அனுபவிக்க முடியும்.
வயிற்றுப் பிழைப்பிற்காக உலகில் உள்ளவர்கள் அன்பு செலுத்துவதைப்போல், நீயும் அன்பு செலுத்தி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே.
கடவுளிடம் மெய்யன்பு செலுத்த அறியாதவன் இம்மையில் ஞானம் அடைய முடியாது. மன அமைதி வேண்டுமா? சுய நலத்தை விட்டு விடு. நீ கடவுளை அடைந்துய்ய மெய்யன்பை அவர்மீது செலுத்தும் முயற்ச்சியில் உன் முழு மனமும் ஈடுபடுமாயின், இப்பிறவியிலேயே, உன் மனதை அமைதி ஆக்கிரமித்து விடும். அமைதியிருக்க ஆசை இருக்காது. ஆசையில்லையெனில் சுயநலம் வராது.
சுயநலம் ஒழிந்து பொதுநலம் பேணில் இறைவன் நம் மனதில் குடியிருப்பான்.
Thursday, December 27, 2007
சுயநலம்
Posted by ஞானவெட்டியான் at 4:36 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment