Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு

பிரபுலிங்க லீலை
********************
15. புறங்கறை ஒழுகுசெம் புண்ணில் ஈயென
வருங்கதை புல்லியர் கொள்வர் மாமலர்
உறுங்களி வண்டினல் லமனொண் காதையைப்
பிறந்துள பயன்பெறு பெரியர் கொள்வரே.

வெளிப்பக்கத்தே குருதி(கறை) ஒழுகும் ஆறாத புண்ணில் ஈ மொய்த்தது போல் இழிந்தோர்(புல்லியர்) வெறுங்கதை (வருங்கதை) பேசுவர். ஆனால், பிறந்ததன் பயனை (பிறந்துள பயன்பெறு) அடைய நினைக்கும் பெரியவர்கள், மலரில் தேனுக்கு மொய்க்கும் வண்டினம்போல் அறநெறி நூலாம் அல்லம காதையைச் சிறப்பாகக் கொண்டு, கற்று, உணர்ந்து அதன்படி நடப்பர்.

0 Comments: