Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு

பிரபுலிங்க லீலை
********************
16. மயலளற் றூன்றுகோல் மல்கும் அன்பெனும்
இயலெழுத் தெழுதுகோ லங்க லிங்கமாம்
வியனிலத் தளவுகோல் மதிவி ளக்கினை
அயர்வறத் தூண்டுகோல் அமல லீலையே.

மயக்கமாகிய சேற்றுக்கு (மயலளற்று) ஊன்றுகோல் நிரம்பிய (மல்கும்) அன்பு; இலக்கணமுடைய எழுத்துக்கு (இயலெழுத்து) எழுதுகோல் அங்கணனாம் (அங்கமாம்) சிவபெருமானின் லிங்கமாம்; விரிவான நிலத்திற்கு (வியனிலம்) அளவுகோல் அறிவாகிய விளக்கு (மதிவிளக்கு); சோர்வு நீங்கத் (அயர்வற) தூண்டுகோல் அமல லீலையெனும் நூல்.

இதை, அமலலீலை, ஊன்றுகோல், எழுதுகோல், அளவுகோல், தூண்டுகோல் ஆம் எனக் கூட்டிப் பொருள் கொள்ளலாம்.

0 Comments: