Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு

பிரபுலிங்க லீலை
********************
17. நன்றிகொள் அடிகணான் குறந டந்துபோ
யென்றனி நாவினின் றெழுமிச் செய்யுளான்
வென்றிகொள் அல்லமன் சீர்த்தி மென்பயன்
கன்றலில் அன்பராங் கன்றை ஊட்டுமால்.


நன்றிகொள் - நன்மையைக் கொண்ட, உற - பொருந்த,
இச்செய்யுள் ஆன் - இந்நூலாகிய பசுவானது,
சீர்த்தி மென்பயன் - மிகுபுகழாகிய சுவையையுடைய பாலை.
கன்றல் இல் - வருந்துதலில்லாத.

செய்யுள் ஆன் அடிகள் நான்குற நடந்து போய்ச் சீர்த்தி மென்பயனை அன்பராங் கன்றுக்கு ஊட்டும் எனக்கொள்க.

வெற்றிகொள்ளும் அல்லமனின் புகழை என் நாவில் எழும் நன்மை கொண்ட நான்கடிச் செய்யுளால் பாடும் பயனை வருத்தம், தொல்லையின்றி அன்பருக்கு ஊட்டுவோம்.

இது எப்படி எனில், என் நாவில் எழும் இச்செய்யுளாகிய பசு(ஆன்) நன்மை கொண்ட நான்கு அடிகள் நடந்து போய் வெற்றி கொள்ளும் அல்லமனின் மிகு புகழாகிய சுவையுடைய பாலை வருத்தமின்றி தன் கன்றுக்கு ஊட்டுமாப்போல் அன்பருக்குத் தரும்.

0 Comments: