Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - சிவத் தோற்றம்

பிரபுலிங்க லீலை
********************
சிவத் தோற்றம்
******************
1.18 பரமசிவம் பிரம மென்னப் பட்டொரு திரிவு மின்றி
உரைமனம் இறந்து நின்ற ஒருசிவ லிங்கத் தன்னின்
வருமுயர் சதாசி வன்றான் மற்றவன் தனைப்பொ ருந்தும்
அருமைகொள் ஞான சத்தி யவர்களாற் சிவனு திப்பன்.

பிரமம் - அக்கினி, ஆதிகாரணம், கடவுள், சிவம்,சுழல், காற்று,சுழற்சி.
திரிவு - மாறுபாடு, ,
உரைமனம் இறந்துநின்ற - வாக்கையும் மனத்தையுங் கடந்துநின்ற.

வாக்கையும் மனத்தையுங் கடந்துநின்ற சுழற்சியிலிருந்து சிவலிங்கம் தோன்றும். அச் சிவலிங்கத்தினின்றும் சதாசிவன் தோன்றுவன். ஞானசக்தி அவனைப் பொருந்துதலால் சிவன் தோன்றுவன்.

0 Comments: