Monday, December 31, 2007

1.19 சாற்றுமச் சிவனுக் கிச்சா

பிரபுலிங்க லீலை
********************
உருத்திரன், திருமால், ஆகியவர்களின் தோற்றம்
*******************************************************

1.19 சாற்றுமச் சிவனுக் கிச்சா சத்தியன் விருவ ரானும்
தோற்றுவன் உருத்தி ரன்றான் சொல்லிய அவற்குச் சத்தி
மாற்றருங் கிரியை யென்பர் மற்றிவர் இருவர் பாலும்
போற்றுறும் அரியு திப்பன் பொறியவன் சத்தி யாமால்.

சாற்றும் - சொல்லும்,
போற்றுறும் - போற்றுதலைப் பெறுகின்ற,
அரி - திருமால்,
பொறி - திருமகள்.

சிவனுக்கு இச்சாசத்தி சத்தியாவாள், இவ்விருவராலும் உருத்திரன் தோன்றுவன். உருத்திரனுக்குக் கிரியாசத்தி சத்தியாவாள். இவர்களிருவராலும் திருமால் தோன்றுவன்.
திருமாலுக்குத் திருமகள் சத்தியாவாள்.

4 Comments:

Anonymous said...

நன்று

Anonymous said...

அன்பு என்னார்,
மிக்க நன்றி.

Anonymous said...

ஐயா!
சைவமும்,வைணவமும்;ஒன்றுள்,ஒன்றெனத் தெளிவாகச் சொல்லப்பட்ட போதும்;இவர்கள் ஏன் அப்பப்போ
முட்டிக்கொள்கிறார்கள்.
நன்றி
யோகன்
பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
என்னதான் தெளிவாக எடுத்து இயம்பிடினும், நுனிப்புல் மேய்வோர், பழமையில் ஊறிய உடும்புகள், சமயச் சண்டையில் குளிர்காய்பவர்கள், இவர்களுக்கெல்லாம் ஏறாது.
உறங்குபவனை எழுப்ப்பலாம்.
உறங்குவதாய் நடிப்பவனை எழுப்ப இயலுமா?