Monday, December 31, 2007

1.20 அத்திரு மாலு மாவும் அளிப்ப

பிரபுலிங்க லீலை
*******************
1.20 அத்திரு மாலு மாவும் அளிப்பவந் துதிப்பன் வண்டு
மொய்த்திசை முரலுஞ் செங்கேழ் முளரிவா னவன வற்குச்
சத்திவெண் கமலை அன்னோர் தரவரும் உலகின் தோற்றம்
நித்தனங் குருகு கேச னினைவுமாத் திரையி னாமால்.

மாவும் - திருமகளும்,
இசைமுரலும் - இசைபாடுகின்ற,
செங்கேழ் முளரி வானவன் - செவ்விய நிறமுடைய தாமரை மலரில் எழுந்தருளியுள்ள நான்முகன், வெண்கமலை - வெண்டாமரை மலரிலுள்ள கலைமகள்,
குகேசன் - குகை ஈசன் - உள்ளக் குகைக் கண் எழுந்தருளியிருப்பவன்.
நினைவு - மாத்திரையின் ஆம் - மேற் கூறப்பெற்ற தோற்றங்களெல்லாம் குகேசனது எண்ணம் ஒன்றினானே நிகழ்வதாம்.

திருமாலும் திருமகளும் அளிக்க நான்முகன் தோன்றுவன். அவனுக்குக் கலைமகள் சத்தியாவாள். இவ்விருவராலும் உலகத் தோற்றங்களெல்லாம் உண்டாகும். இவ்வளவும் உள்ளக் (கபாலக்)குகைக் கண் எழுந்தருளியிருக்கும் சிவனாம் (சீவனின்) அல்லமதேவனது எண்ணத்தினாலே உண்டாவதாம்.

0 Comments: