பிரபுலிங்க லீலை
********************
1.21 ஆக்குறுஞ் செயல தொன்றே அயன்றனக் காக்க லோடு
காக்குறுஞ் செயலி ரண்டுங் கண்ணனுக் காக்கல் காத்தல்
போக்குத லென்றிம் மூன்றும் புராந்தகற் களித்த வர்க்கு
நீக்கரும் இறைமை நல்கி நிறுவினன் குருகு கேசன்.
அல்லமதேவன் முத்தேவர்களையும் அதிகாரத்தில் நிறுத்தியது
ஆக்குறுஞ்செயல் - படைக்குந் தொழில்,
காக்குறுஞ் செயல் - உலகினைப் பாதுகாக்குந் தொழில்.
போக்குதல் - அழித்தல்.
புராந்தகன் - புரத்தைச் சுட்டெரித்தழித்த உருத்திரன்.
நீக்கரும் - யாவரானும் மாற்றப்பெறாத,
இறைமை - தலைமைத் தன்மை,
நிறுவினன் - அமைந்தனன்.
குருவாகிய(சிவனாகிய சீவன்) அல்லமதேவன், நான்முகனுக்குப் படைத்தற்றொழிலையும், திருமாலுக்குப் படைத்தல் காத்தலாகிய இரு தொழில்களையும், உருத்திரனுக்குப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களையும் அளித்து அவர்களைத் தலைமைப் பதவிக்கண் அமைத்தருளினன். ஈண்டு, மனிதர்களைப் படைக்கும் தொழிலுக்குப் பரியாக(பதிலாக), எண்ணப் படைப்பெனக் கொள்ளல் தகும்.
துதிகதி முடிந்தது.
**************************************
Monday, December 31, 2007
1.21 ஆக்குறுஞ் செயல தொன்றே
Posted by ஞானவெட்டியான் at 5:44 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment