பிரபுலிங்க லீலை
********************
14. கன்றிய வைரிகள் காதுங் காதையும்
வன்றுயர் மதனநோய் வளர்க்கு மாற்றமும்
புன்றொழி லினர்வறும் பொழுது போக்கலும்
அன்றருள் அல்லமன் அமல லீலையே.
சினங்கொண்ட(கன்றிய) பகைவர்கள்(வைரிகள்) ஒருவருக்கொருவர் கொலை செய்துகொள்ளும் கதையும்(காதுங்காதையும்), காமநோயைப் (மதனநோய்) பெருக்கும் இழி தொழிலை உடையவர்(புன்தொழிலினர்) மயங்குமொழி பேசி வீண் பொழுது போக்கலும் நிறைந்திருக்கும் வேளையில் இந்த அருள் பொருந்திய அல்லமன் அமல லீலை(குற்றமற்ற திருவிளையாடல்) இயற்றப் பெற்றது.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - காப்பு
Posted by ஞானவெட்டியான் at 5:37 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment