பிரபுலிங்க லீலை
********************
13. நாற்கதி தருமிடர் கடந்து நச்சுநர்
பார்க்கதி முதலிரு பத்தைந் தாங்கதி
மேற்கதி பெறவருள் விளங்கும் அல்லமன்
சீர்க்கதி யிருபதோ டைந்துஞ் செப்புவாம்.
கதி = படலம், மூச்சுக் காற்று
நாற்கதியாம் தேவகதி, மனிதகதி, விலங்குகதி, நரககதி தரும் துன்பங்(இடர்) கடந்து, மண்தத்துவம்(பார்க்கதி) முதலான இருபத்தைந்து தத்துவங்கள் (இருபத்தைந்தாங்கதி) கடந்து நிற்கும், விரும்புவோர்(நச்சுநர்) வீடுபேறு(மேற்கதி) பெற அருளும் அல்லமன் சரிதத்தைச் சீருடன் இருபத்திஐந்து படலங்களில் இயம்புவோம்.
தத்துவங்கள் இருபத்தி ஐந்து:
பூதம் 5, பொறி 5, புலன் 5, தொழில் உறுப்புக்கள் 5, மூலப்பகுதி, புருடன், புத்தி, அகங்காரம், மனம் ஆக 5. ஆக மொத்தம் 25.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - காப்பு
Posted by ஞானவெட்டியான் at 5:36 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment