Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு - முருகக் கடவுள்

பிரபுலிங்க லீலை
*******************
4.முருகக் கடவுள்
********************
4.பாக மொருபெண் குடியிருக்கும் பரமன் அணியிற் பரித்தமணி
நாக நுழைவுற் றுடல்சுருண்டு கிடந்து நகுவெண் தலைப்புழையிற்
போக மெல்லத் தலைநீட்டிப் பார்த்து வாங்கப் போகுமொரு
தோகை மயில்வா கனப்பெருமான் துணைத்தாட் கமலந் தொழுதிடுவாம்.

இடப்பாகத்தில் அம்மையொடு காட்சி தரும் ஐயன் அணிகலனாகத் தாங்கியுள்ள மணிநாகம் உடல் சுருண்டு கிடந்து நகைப்பதுபோல் விளங்கும் வெள்ளிய தலைவாயிலின் வெளியேபோக மெல்லத்தலையை நீட்டிப்பார்த்து, ஆங்கே மயில்வாகனனையும் மயிலையும் கண்டு தன் இனத்திற்குறிய அச்சத்துடன் மருண்டு தலையை உள்ளே இழுத்துகொள்ளும். அத்தகைய சிகண்டி (மயில்) மேல் எழுந்தருளியுள்ள மயில்வாகனப் பெருமான் கமலப் பாதம் தொழுதிடுவோம்.

0 Comments: