Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு -அல்லம தேவர்

பிரபுலிங்க லீலை
********************

அல்லம தேவர்
*****************

5. கலையை மதிக்கும் புலவர்தமைச் சித்தர் குழாத்தைக் கடவுளரை

நிலையை மதிக்கு முனிவரரைத் திசைமா முகனை நிரைவளையாச்

சிலையை மிதிக்கு நொடியோனை விழுங்கி உமிழாத் திறல்மாயை

தலையை மிதிக்கும் அல்லமன்செங் கமல மலர்த்தாள் தலைக்கணிவாம்.

அறுபத்திநான்கு கலைகளையும் (சூரிய, சந்திர, அங்கி கலைகளையும்) கற்றுணர்ந்த புலவர்கள், சித்தர்கள், கடவுள்கள், மெய்ப்பொருளாகிய தத்துவ நிலையை உணர்ந்து மதிக்கும் முனிவர்கள், திசைமாமுகனாம் நான்முகன், ஒழுங்குதவறாத (நிரை=ஒழுங்கு; வளையா=தவறாத) சிலையாம் அகலிகையை மிதித்துப் பேறீந்த நெடியோனாம் திருமால், ஆகியோரைத் தன்னகப்படுத்திப் பின் தெளிவுறாவண்ணம் மயக்கும் மாயையை வென்றவனாம் (மாயையின் தலையை மிதிக்கும்) அல்லமனின் செங்கமலப் பாதத்தைத் தலைக்குக் காப்பாய் அணிவோம்.

0 Comments: