Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு - சிவனடியார்கள்

பிரபுலிங்க லீலை
********************
சிவனடியார்கள்
******************
10.பரவை கேள்வன் திருத்தொண்டத்
............ தொகையுள் அடியார் பத்தியெல்லாம்
உருவ மாகு நஞ்சோம
............ நாதன் துதியு ளுறுசரணர்
அரவ வணியான் அடியார்கள்
........... மற்றை யவர்கள் அனைவருந்தாம்
விரவி நாளும் இருப்பவிடங்
.......... கொடுக்கு முள்ளம் விரிந்தன்றே.

சுந்தரமூர்த்தியடிகள் (பரவை கேள்வன்) முதலான திருத்தொண்டர் குழாத்தின் அடியார், அன்பெல்லாம்(பத்தியெல்லாம்) சேர்ந்து உருவான நம் சோமநாதக் கடவுளைத் துதிக்கும் வீரசைவ அடியார்கள்(சரணர்கள்), அரவணிந்த சிவனின் அடியார்கள், மற்ற தொண்டர்கள் அனைவரும் கலந்து (விரவி) இருப்ப இடந்தரும் உள்ளம் விரிந்து பெருகியது.

அதாவது, வீரசைவ, சைவ சமயத்தில் உள்ள அடியார் யாவரையும் இப்பாவால் ஆசிரியர் வணங்குகிறார்.

0 Comments: