பிரபுலிங்க லீலை
********************
காப்பு - முத்தமிழ் நால்வர்
***************************
9.பெண்ணிற் கரசு தானாக என்பு பெருநீற் றறைபிரச
வண்ணக் கமல மலர்ப்பொய்கை யாகச் செங்கல் மாழையாய்
நண்ணச் சிறிய நரிகள்முடங் குளைய பரியாய் நகர்புகுதப்
பண்ணற் குரிய அமுதுறழ்முத் தமிழ்நால் வரையும் பணிகுவாம்.
அமிழ்து ஒத்த(உறழ்) முத்தமிழ் நால்வராம், திருமலையில் எரிந்த எலும்புச் சாம்பல் அரசிபோல் பெண்ணுருவாகத் தோணவும் (என்பு பெண்ணிற் கரசு தானாக) வைத்த சம்பந்தரையும், சுண்ணக் காளவாயை (பெருநீற்றறை) தேன் பொருந்திய அழகிய தாமரை மலர்களையுடைய பொய்கையாய் குளிர வைத்த அப்பரையும், செங்கல் பொன்னாய் மாற வைத்த (மாழையாய் மின்னவும்) சுந்தரரையும், சிறு நரிகள் மடங்கிய பிடரி மயிருடைய குதிரைகளாகவும் (முடங்குளைய பரிகளாகவும்) மாற்றி நகர்புக வைத்த திருவாதவூரடிகளையும் பணிகிறேன்.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - காப்பு -முத்தமிழ் நால்வர்
Posted by ஞானவெட்டியான் at 5:31 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment