பிரபுலிங்க லீலை
********************
மடிவாலமாச்சையர்
************************
8. வார்க்குங் குமமென் முலைபாக
.............. னடியார் அறுவை மாசடித்துத்
தீர்க்குஞ் செயல்போல் விச்சலமன்
............ னவன்றன் சேனை செய்பிழையைத்
தாக்குங் கரவாள் கொடுசின்ன
........... பின்ன மாகத் தடித்திட்டுப்
போக்குங் கருணை மடிவால
............. மாசன் பொன்னங் கழல்போற்றி.
கச்சு(வார்)கட்டிய குங்கும மென்முலையாளாம் சத்தியின் பாகனாம் சிவனின் அடியார்களின் ஆடை(அறுவை)களை அழுக்குப் போக்கி(மாசடித்து)த் தூய்மைப் படுத்திக் கொடுக்குங்கால், அவ்வடைகளை அறியாது தீண்டத்தகாதவன் தீண்டியதால், சினமடைந்து, மடிவாலமாச்சையர் தன் கை(கர)வாளால் அவனைக் கொன்றார். அதுகேட்டு, விச்சலமன்னன்(விச்சலமன்) தன் படைகளை அனுப்பி மடிவாலமாச்சையாரைக் கொன்றுவரப் பணித்தார். அப்படைகளையும் சின்னபின்னப் படுத்தி வெட்டி(தடித்திட்டு) தள்ளினார் மடிவாலமாச்சையர். அவருடைய பொற்பாதம் (பொன்னங்கழல் அணிந்த கால்களின் திருப்பாதம்) போற்றி.
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - காப்பு - மடிவாலமாச்சையர்
Posted by ஞானவெட்டியான் at 5:30 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment