Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு - சென்னவசவர்

பிரபுலிங்க லீலை
*******************
சென்னவசவர்
****************
7. பங்க வளற்று வழிமாற்றி ஒருநல் வழியைப் பகர்வார்போல்
தங்கள் மதியிற் பலபிதற்றுஞ் சமய ருரைகள் தமைநீக்கி
அங்க நிலையிற் றிலிங்கநிலை யிற்றென் றருளும் வீரசைவ
சிங்க நிலைத்த அருட்சென்ன வசவன் திருத்தாள் சிரந்தணிவாம்.

குற்றம் பொருந்திய சேற்றுவழியை நீக்கி வழிமாற்றி ஒரு நல்வழியைச் சொல்வார்போல் தங்கள் அறிவால் பலவற்றைப் பிதற்றும் சமய உரைகளை நீக்கி, ஆறு அங்கங்களின் (பக்தன், மாகேசன், பிரசாதி, பிராணலிங்கி, சரணன், ஐக்கியன்) நிலைமையயும், இலிங்க (ஆசாரலிங்கம், குருலிங்கம், சிவலிங்கம், சங்கமலிங்கம், பிரசாதலிங்கம், மகாலிங்கம்) நிலைமையையும் இத்தன்மையுடைத்து என்று அருளுடன் எடுத்துக்கூறிய, வீரசைவ வழியில் சிங்கத்தையொத்தவனுமாகிய சென்னவசவன் திருத்தாட்களை சிரத்திலணிந்து போற்றுவோம்.

0 Comments: