Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - காப்பு

பிரபுலிங்க லீலை
*******************
11. தண்ணிலவு புனைசடிலத் திறைபுகழல்
........... லமதேவன் சரிதத் தீம்பால்
புண்ணியரஞ் செவிவாயில் தமிழ்ச்சங்கத்
........... தான் முகந்து புகட்டினானால்
எண்ணரிய புகழ்மலயத் திருந்தவனோர்
............. வடிவெடுத்தான் என்று கூறப்
பண்ணியமுத் தமிழ்க்கவிதைச் சிவப்பிரகா
.......... சப்பெரும்பேர் படைத் துளானே.

குளிர்ந்த சந்திரனைத்(தண்ணிலவு) தன் சடைக்கற்றையில்(சடிலம்) அணிந்த(புனை) சிவமாகிய இறைபுகழ் அல்லமதேவரின் சரிதமெனும் சுவைமிக்க(தீம்) பாலை புண்ணியம் செய்தமையால் அவர்தம் செவியாகிய வாயில் அப்பாலை பொதிகை மலைவாழ் பெருந்தவ அகத்தியன் தமிழ்ச் செய்யுளாகிய சங்கினால் புகட்டினால்போல், சிவப்பிரகாசர் எனும் பெயர்படைத்தவர், ஆண்டவன் அல்லமதேவராக வடிவெடுத்தார் என்று அவர்தம் சரிதம் படைத்தார்.
(எ.வி) : சிவன் தன் தலையில் உள்ள சடைக் கற்றையில் பிறைச்சந்திரனை அணிந்துள்ளார்.

அத்தகைய இறைவனே அல்லமதேவராக அவதரிக்கும் சரிதத்தை சிவப்பிரகாச அடிகள் இயற்றியது, அல்லமதேவர் சரிதம் என்னும் சுவையுள்ள பாலை, தமிழ்ச் சங்கினால், பெருந்தவக் குறுமுனி அகத்தியனே வந்து நம் வாயில் ஊட்டுவது போலுள்ளது.

(இப்பா சிவப்பிரகாச அடிகளாரின் உடன்பிறந்தார் ஒருவரால் இயற்றப்பட்டதெனக் கூறுவர்)

0 Comments: