ஒரு வரி ஞானம்
*******************
1. முத்தி உன்னிடமே இருக்கிறது. அதை வெளியில் தேடி காலத்தை வீணாக்காதே.
2.மற்றொன்றை இழிவாக நீ நினைக்கும் வரை உனக்கு ஞானமில்லை.
3. அன்பே தெய்வம். அன்பை வழிபட்டு, அன்பினால் உன் மனதைத் தூய்மையாக்கிக் கொள். உன்னுள்ளத்தைத் தூய்மையாய் வைத்துக்கொண்டால் உன் உள்ளத்தில் இறைவன் வசிப்பான்.
4. இறைவன் ஒருவன் இருக்கிறான் என நம்பினால், எல்லையற்ற பரம்பொருள் உன் நம்பிக்கையில் தோன்றும்.
5. தகுதி இல்லாது விடுதலையை வேண்டும் நீ, தகுதி வேண்டுமெனில் ஆசையை ஒழித்துவிடு.
6.உன்னுள்ளத்தின் சக்திகளையெல்லம் ஒருமுகப் படுத்தி உள்ளே பார். உண்மை (உள்+மெய்) விளக்கமாகிவிடும்.
7. அன்பு காட்டு. அன்பே தெய்வம். அதை அடைய தியாக புத்தி வேண்டும். தியாகத்தால் முத்தி கிட்டும்.
8.உன் ஆன்மாவில்தான் உண்மை தங்கியுள்ளது.
9.நீ பிறருக்குச் செய்யும் தீமையெல்லாம் உன் ஆன்மாவிற்கு நீ
செய்துகொள்ளும் தீமைகள்தான்.
10. நீ சுதந்திரமாக இருக்கவேண்டுமெனில், உன் பிறவியைத் துறக்கவேண்டும்.
11.உண்மையாக உன்னைக் காணவேண்டுமெனில் உன்னகத்தே உன் பார்வையைச் சிதறாது செலுத்து.
12.துன்பத்திற்குக் காரணம் நீ பிறிதொன்றைச் சார்ந்து இருப்பதுதான்.
உன்னையே நீ சார்ந்திருந்தால் சுகமான நிலை கிட்டும்.
13.இருப்பது ஒன்றே. அது ஆன்மாவைத் தவிற வேறொன்றுமில்லை. ஐயமுறுபவனுக்கு ஞானம் கிட்டாது.
14.உன்னால் காணும் மற்றவர்கள் உன்னிலும், நீ அவர்களிடமும் இருப்பதே உண்மை. இதை உணர்ந்தால் துன்பமேதுமில்லை.
15.இவ்வுலகம் கானல் நீர் என்பதை மறவாதே.
16.நான் ஒன்றுமில்லாதவன்; நான் சக்தியற்றவன்; என நினைத்துக் கொண்டிருப்பின் வலுவிழந்து போவாய். வாழ்க்கை நாயினும்
கேவலமாகிவிடும்.
17.பாவிகளுக்குத்தான் உலகப்பற்று பெருக்கெடுக்கும். நீ எதையும் வேண்டாதே. உன்னையே இறைவனுக்குக் கொடுத்துச் சரண் அடைந்துவிடு. பாவம் உன்னைத் தீண்டாது.
18.எண்ணங்களைத் துறந்தவனே நற்கதியடைய முடியும்.
19.அகந்தையை வேரோடு கிள்ளி எறிந்தால்தான் சீவன் முத்தி கிட்டும்.
20.சொர்க்கமும் நரகமும் உனக்குள்ளேதான் உள்ளது.
Thursday, December 27, 2007
ஒரு வரி ஞானம்
Posted by ஞானவெட்டியான் at 4:47 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment