பிரபுலிங்க லீலை
*******************
காப்பு
******
3."சுரகு லாதிபன் தூய்மலர் நந்தனம்
பெருக வார்கடற் பெய்த வயிற்றினோன்
கரக் நீரைக் கவிழ்த்த மதகரி
சரணம் நாளும் தலைக்கணி யாக்குவாம்."
சுரகுலம் - தேவகுலம்
நந்தனம் - நந்தவனம், பூம்பொழில்
வார்கடல்பெய்த - நீண்ட கடலைக் குடித்த
கரகம் - கமண்டலம்
மதகரி - மதத்தினையுடைய யானை
சரணம் - திருவடி
தேவகுலத்ததின் அதிபன் தேவேந்திரன் சீகாழியில் நந்தவனம் அமைத்து பல நல்ல தொண்டுகள் செய்து வரும்பொழுது, மழையின்மையால் வாடிய பூங்காவினைக் காக்க இறைவனை வேண்டினன். அவ்வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து ஆனைமுகக் கடவுள் காகத்தின் வடவம் எடுத்துக் கடல் குடித்த அகத்தியனின் (குருமுனியின்) கமண்டலத்திலுள்ள நீரைக் கவிழ்த்தார். அது காவிரி(கா+விரி)யாய்ப் பெருகி வந்து காவினை விரிந்து தழையச் செய்தது என்பது புராணம்.
இப்படியான திருவிளையாடலைப் புரிந்த கணபதியின் திருவடியை நாளும் தலைக்கு அணியாக்குவம்(தலையில் சுமப்பேன்).
Monday, December 31, 2007
பிரபுலிங்க லீலை - காப்பு
Posted by ஞானவெட்டியான் at 5:24 AM
Labels: பிரபுலிங்க லீலை
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment