Monday, December 31, 2007

பிரபுலிங்க லீலை - அறிமுகம்

பிரபுலிங்க லீலை - அறிமுகம்
*********************************

இறவாப் புகழுடைய இறைவன் திருவிளையாடல்கள் பலப்பல. அவைகளை மனுவுக்குச் சத்திநிபாத முறைநோக்கிப் புகட்டும் நூல்கள் சிலவே. அவற்றுள் ஒன்றான அரிய நூல்களில் இதுவும் ஒன்று.

இறைவன் அல்லமதேவராக எழுந்தருளிவந்து சமயம் என்பது எது? பொருள் நூல் எது? இது ஆகும், இது ஆகாது என்னும் வேற்றுமைக்கு இடமில்லாது எச்சமயத்திற்கும் முதன்மையாக இலங்கும் "சைவ சமயத்"தின் ஒரு கூறாகிய வீரசைவத்தை வளர்த்த மேம்பாட்டை விளக்க இந்நூல் எழுந்தது.

இதில் குறிக்கோளாக நிற்பவர் அல்லமதேவரும், மாயையும் ஆகும். இவ்விருவரே இந்நூலுக்குத் தலைவராவர். இதன் நுண்பொருள், மெய்ஞானத்திற்கும் அஞ்ஞானத்திற்கும் மூண்ட போர்; இறுதியில் மெய்ஞானமே அஞ்ஞானத்தை வெல்கிறது.

இதனை உருவகித்து, மெய்ஞானச் செல்வராகிய சிவப்பிரகாச அடிகளார் ஆக்கிய இந்நூல் வழக்கிழந்தது சொல்லொணாத் துயர் தந்ததாலேயே இணையத்திலேற்றினோம்.

3 Comments:

Anonymous said...

//சொல்லொணாத் துயர் தந்ததாலேயே இணையத்திலேற்றினோம்.//
அப்படி என்ன துயர் யார் கொடுத்தது

//சிவப்பிரகாச அடிகளார்//

இப்பொயரை கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் முழுமையாக தெரியவில்லை

Anonymous said...

அன்பு என்னார்,
//அப்படி என்ன துயர் யார் கொடுத்தது//

அதுதான் சொல்லிவிட்டேனே! சொல்லொணாத் துயர் என.
கொடுத்தது என் மனம்.

//இப்பொயரை கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் முழுமையாக தெரியவில்லை//

அடுத்து வருகிறது.

Anonymous said...

ஞானவெட்டியான் அவர்களே

வழகிழந்து போய்விட்ட ஓர் அழகிய நூலை மீண்டும் வழக்கிற்கு கொண்டுவரும் இப்பணியைத் தொடங்கியிருக்கும் தங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். சிவப்பிரகாசர் 17ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த வீரசைவ மரபினர் என்றாலும், சைவ சித்தாந்தத்தையோ திருமறைகளையோ மறக்காதவர். அவரின் 'நால்வர் மணிமாலை , தர்க்க பரிபாஷை, சிவப்பிரகாச விகாசம் ' ஆகியவை வழக்கிழந்து விட்டாலும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது.

பழமையை மறந்துசெல்லாது, அங்கு இருக்கும் நல்ல நுட்பங்களை அகப்படுத்தியே செல்லவேண்டும்.

வாழ்க நுமது பணி!

உலகன்