Thursday, December 27, 2007

திருமணச் சடங்குகளும் நோக்கமும்

திருமணச் சடங்குகளும் நோக்கமும்
*****************************************

என் சிறுபுத்திக்கு எட்டியவரை:

அம்மி மிதிப்பது = பெண்ணின் கால் ஊனமற்ற நிலையில் உள்ளதாஎனச் சரி பார்ப்பதற்கும், உனக்குஎத்துன்பம் வந்தாலும் உன் காலடியில் நின்று
உன்னைத் தூக்கிக் கரைசேர்ப்பேன் என உறுதி கூறுவதற்காகவும் இருக்கலாம்.

அருந்ததி பார்ப்பது = பெண்ணின் கண்பார்வையை சோதிப்பதற்காகவும், அருந்ததியைப்போல் நீயும் இருக்கவேண்டும் எனச் சொல்லுவதற்காகவும் இருக்கலாம்.

தாலியணிவித்தல் = மிஞ்சி போடுதல் = இப்பெண்ணுக்குத் திருமணமாகிவிட்டது என அடுத்தவர்களுக்குக் காட்டுவதற்காக.

பூணூல் அணிதல் = முறையாக ஞான உபதேசம் பெற்றுவிட்டான். முக்கலை ஒன்றித்தல் வித்தை இவனுக்குத் தெரியும்எனக் காட்ட

காசி யாத்திரை = அக்காலத்தில் காசிக்குச் செல்வது மிகக் கடினம்.
காசிக்குச் சென்று பாவங்களைக் கழித்து விட்டான். இனி திருமணஞ்
செய்யலாம்எனக் காட்ட

பாக்கி தெரியவில்லை தெரிந்தவர் விளக்குங்களேன்.
நானும் தெரிந்து கொள்கிறேன்.

4 Comments:

Anonymous said...

ஆணுக்கு திருமணமாகிவிட்டது என்பதை எப்படி அறிந்து கொள்வது? இதற்கும் நம்
முன்னோர்கள் ஏதாவது காரணம் வைத்து இருப்பார்களோ??

Anonymous said...

ஆண்கள் பொது இடங்களில் புழங்குகிறவர்கள். அவர்களுக்குள், ஒருவரைப் பற்றி
மற்றவருக்கு நன்கு தெரிந்திருக்கும்.
அத்துடன் ஆண்கள்தான் தம் திருமணத்திற்காகத் தம் விருப்பத்திற்கேற்ற
பெண்ணைத் தேடி அலைவது வழக்கம். அப்போது இனங்காட்டவே, மங்கலச்
சின்னங்களைப் பெண்கள் அணிகின்றனர். இச் சின்னங்கள் கண்ணில் பட்டவுடன்
ஆண்கள் ஒதுங்கிச் செல்வது வழக்கம் (அக்காலம்?)

முக்கலை ஒன்றித்தல் விளக்கம் கேட்டமையிலிருந்து ஞானக் குறள் இன்னும்
தெளிவாகப் படிக்கவில்லை. இல்லையெனில் நான் தெளிவாக விளக்கவில்லை எனத்
தெளிவாகிறது.

உடம்பில் ஓடுவது 3 கலைகள்.

சூரிய கலை - இருப்பிடம் வலது கண்
சந்திர கலை - இருப்பிடம் இடது கண்
அக்கினி கலை - மூலாதாரம் (இவைகள் உடலுக்கும் நிலைக்கும் தகுந்தவாறு
மாறும்).எளிமையாகச் சொன்னால் பிராணவாயுவாகிய ஆன்மாவாகிய சிவனாகிய சீவன்.

இந்த மூன்று கலைகளையும் ஒன்று சேர்த்து கபாலக் குகையில் மேலேற்ற ஞானம்
விளைவுபெறும்.
மனத் தெளிவு, அமைதி கிட்டும். பிறவிப் பிணி போகும்.

இதற்கு முன்னமேயே வழிகள் கூறியுள்ளேன்:

1. சப மாலையுடன் அமர்ந்து நாமஜபம் ஏதாகிலும் (ராம ராம, சிவ சிவா) ஒன்றை
சபித்து, அதே நேரத்தே சமாலையை உருட்டி எண்ணிக்கையும் கவனித்து வருதல்.

2.தன் மூச்சுக்காற்றுஎங்கெல்லாம் சென்று வருகிறதுஎனக் கவனித்தல்

3. "ஊசிப்பார்வை நாசிநுனி மீது வைக்கின் காசினியில் செய்த கருமம்
தொலையுமே" - முதுமொழி

பீருமுகமது ஞானரத்தினக் குறவஞ்சி:
"தன்னை அறியும் தலமேது சொல்லடி சிங்கி - அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!"

இருகண்களாகிய சூரிய, சந்திர கலைகளையும், புருவமத்தியில் கொண்டு சேர்த்தல்
வேண்டும். அதற்கு முதலில் இருகண்களாலும் மூக்கு நுனியைக் கூர்ந்து
பார்க்கவேண்டும். அப்படிச் செய்துவந்தால் பார்வை மேலேறும். புருவ
மத்தியடையும். பின்னரும் முக்கோணப் பார்வையாய் கபாலத்தினுள்ளே மேலேறும்.

விளங்கவிலையெனில் வினாவெழுப்புங்கள்.
தெரிந்தவரை சொல்கிறேன்.

Anonymous said...

பூணூல் குறித்து எனது சக நண்பரிடம் கேட்டபோது காயத்திரி மந்திரம் அவர்கள்
ஜெபிக்கும் போது countdown செய்வதற்கு பயன்படுத்துவதாகக் கூறினார்.

Anonymous said...

அன்பு இராமா,

அக்காலத்தே குருகுலத்தில் எழுத்து அறிவு ஊட்டும்போதே ஞான மூலப் பாடமாம்
வாசிப் பயிற்சியையும் சேர்த்துத்தான் சொல்லித் தருவார்கள்.
ஆக,எல்லோருக்கும் தெரியும். முறையாகப் பயிற்சி பெற்றபின்னரே பூணூல்
அணிவித்துவிடுவது வழக்கம். அப்பொழுத்துதான் வலக் காதில் காயத்ரி மந்திரம்
உபதேசிக்கப் படும்.

இதில் பயிற்ச்சி உண்டுஎன்பதற்கு அடையாளம்தான் முப்புரி நூல். பெண்கள் சடையையும் மூன்று பிரிவாக்கிப் பின்னி வைப்பதும் அதற்காகவே.

இக்காலத்தில் காயத்ரி மந்திரம் எண்ணுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்
போலும். பூணூல் அணியும் மூத்தோரிடம் கேட்பின் நல்லதொரு விளக்கம் கிட்டலாம்.