Thursday, December 27, 2007

காயமே இது பொய்யடா

காயமே இது பொய்யடா
***************************

ஐயா,
காயமே இது பொய்யடா.....
என்ற செய்யுளைச் சொல்லி அதன் பொருளைச் சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்...
பிரியமுடன்,
சிவா..
அன்பு சிவா,

"காயமே இது பொய்யடா
வெறும் காற்றடித்த பையடா
மாயனாராம் மண்ணு குயவன்
செய்த மண்ணு பாண்டம் ஓடடா"

யாக்கை(உடல்) நிலையாமையைக் குறிக்கும் பாட்டு. மாயனாகிய ஈசன் மண்ணைப் பிசைந்து செய்த மட்பாண்டமாகிய இக் காயம் (உடல்), சீவனாகிய காற்றைத் தாங்கும் பை. ஆனால் உடல் அழியும். சீவன் அழியாது.எப்படிஎனில் மண்ணால் செய்த கலன் உடைந்தால் ஓடு மட்டும் மிஞ்சுமாப்போல.

இதையே பாம்பாட்டிச் சித்தர்:

"ஊத்தைக் குழிதனிலே மண்ணைஎடுத்தே
உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
வறையோட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே."

குழந்தையை உலகிற்குத் தரும் குழியிலிருந்து ஐம்பூதங்களில் ஒன்றான
மண்ணைஎடுத்து உதிரப் புனலில்( இரத்தநீரில்) குழைத்து குயவனாகிய ஈசன் கொடுத்த உடலாகிய இம்மட்பாண்டம் உடைந்துவிட்டால் உபயோகமற்ற மண்ணோட்டிற்குக் கூடப் பயன்படாது என்று ஆடு பாம்பே என்றார்.

0 Comments: