Friday, December 28, 2007

கடவுளிடம் பொருள் கேட்காதே!

கடவுளிடம் பொருள் கேட்காதே!
***************************************
பிரம்மாவைக் குறித்துத் தவமிருந்த ஒருவனுக்கு பிரம்மா தரிசனம் தந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும். கேள்" என்றார். உடனே, தின்னிப் பண்டாரமான அவன், "கடவுளே! எனக்கு ஆயுள் பூராவும் அமர்ந்து சுவையுடன் திருப்தியாக உண்ணும அளவுக்குப் பொருள் கொடு!" என்றான்.

பிரம்மாவோ, அவ்வளவுதானே! அதோ அந்த நரியிடம் சென்று பேசிவிட்டு வா. நீ கேட்டதைத் தருகிறேன்" என்றார். அவனும் நரியிடம் சென்று, "நரியாரே! நான் பிரம்மாவிடம் பொருள் கேட்டேன். அவர் உன்னைப் பார்க்கச் சொன்னார்" என்றான். நரியும் உடனே,"அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் நடந்த கதையைக் கூறுகிறேன். கேள்" என்றது.

ஒரு ஒட்டகம் உன்னைப்போல் தவமிருந்து, பிரம்மாவிடம் வரம் கேட்டது. அது என்ன தெரியுமா? "கடவுளே! எனக்கு இப்போது இருப்பதைவிட நீண்ட கழுத்து வேண்டும். படுத்துக்கொண்டே மரத்தின் இலைகளப் பறித்து உண்ணவேண்டும்" என்றது. பிரம்மாவும்,"இந்தா! பிடி. தந்தேன் வரம்" எனக் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார்.

பின்னர் நரி,"கழுத்தும் நீண்டது.அது உழைக்காமல் படுத்துக்கொண்டே சாப்பிட்டது. நேரம் அதிகம் இருப்பதால் மற்ற குறும்புகளைச் செய்ய ஆரம்பித்தது. தன்னுடைய நீண்ட கழுத்தைப் போவோர் வருவோர் நடுவிலும் நீட்டித் தடுக்கிவிழச் செய்து சிரித்து மகிழ்ந்தது. ஒரு நாள் கடும் மழை. நானும் என் மனைவியும் இவ்வழியே வந்தோம். மலையின் அடியில் சின்ன குடவரை இருந்தது. நாங்கள் ஓடிப்போய் ஒண்டிக்கொண்டோம். ஒட்டகமும் அதற்குள் நுழைய முயன்றது. ஆனால், பாதிக் கழுத்துதான் உள்ளே நுழைந்தது. மீதிக் கழுத்தும் உடலும் வெளியே இருந்தது. அது கண்டு எங்களுக்கு மகிழ்ச்சி. பாய்ந்து சென்று கழுத்தைக் கடித்தோம். அது வலி தாளாமல் அலறியது. ஆனாலும் தப்பிக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் ஒட்டகத்தைத் தின்றுகொண்டிருக்கிறோம். இன்னும் ஒருமாத காலத்திற்கு எங்களுக்கு உணவுப்பஞ்சம் இல்லை என்று இங்கேயே தங்கிவிட்டோம்" என்றது.

மனிதன் சிந்தித்தான். உடனே கதையின் கருத்து புரிந்தது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. உடனே பிரம்மாவைப் பார்த்து,"கடவுளே!ஆட்டுக்கும் வாலை அளந்துதான் வைத்திருக்கிறாய். அவரவருக்குறிய படியை அளக்கிறாய். கூடுதலாய்க் கொடுத்தால் என்ன ஆகுமெனப் புரிந்துகொண்டேன். இப்போது இருப்பதே போதும். ஆகவே, தேவையான சமயத்தில் தேவையானவற்றைக் கொடுத்தால் போதும்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

17 Comments:

Anonymous said...

கதையும் கருத்தும் நன்றாக இருக்கிறது ஐயா. :-)

Anonymous said...

அன்பு குமரன்,
மிக்க நன்றி.

Anonymous said...

வணக்கம்..

நல்ல கதை..
"போதும் என்ற மனம் பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது..
ஆனால் போதும் என்ற மனத்திற்கு பொன் செய்யும் மருந்து எதற்கு என்றும் தோன்றுகிறது :)

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Anonymous said...

அன்பு சுகா,
"போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து" என்பது முதுமொழி.

பொன் செய்யும் மருந்தே போதுமென்னும் மனம். இன்னும் மற்றவை எதற்கு? என்பது பொருள் அல்லவா?

Anonymous said...

தங்கள் விளக்கத்துக்கு நன்றி.

Anonymous said...

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பு சுதாகர்,
மிக்க நன்றி.

Anonymous said...

அய்யா உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

என்னை இந்த பூமியில் படைத்து, எனக்கு தேவையானவற்றை எல்லாம் நான் கேட்காமல் தந்தவனிடம் நான் என்ன கேட்பது? கொடுத்துவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளாதே என்பதை தவிர!

Anonymous said...

அன்பு வெங்கி,

//
என்னை இந்த பூமியில் படைத்து, எனக்கு தேவையானவற்றை எல்லாம் நான் கேட்காமல் தந்தவனிடம் நான் என்ன கேட்பது? கொடுத்துவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளாதே என்பதை தவிர!//


என்னை இந்த பூமியில் படைத்து, எனக்கு தேவையானவற்றை எல்லாம் நான் கேட்காமல் தந்தவனிடம் நான் என்ன கேட்பது? தேவையானவற்றை எல்லாம் கேட்காமல் த்ந்தவனுக்கு, இவனுக்கு எப்படிப் படியளப்பது எனத் தெரியுமல்லவா?

கொடுத்துவற்றை திரும்ப எடுத்துக் கொள்ளாதே எனக் கேட்கவேண்டாம்.

"நான் உன் பாதத்தைச் சரணடைந்து விட்டேன். இனி உன் பாடு" எனச் சரண் அடைதலே சிறந்த வழி என எனக்குப் படுகிறது.

Anonymous said...

//நான் உன் பாதத்தைச் சரணடைந்து விட்டேன். இனி உன் பாடு" எனச் சரண் அடைதலே சிறந்த வழி//

அருமையான கருத்தை பதிவிலும் பின்னூட்டத்திலும் கூறியிருக்கிறீர்கள்
நன்றி
காலம் கடந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

அன்பு டி.இராஜ்,
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
தங்களின் கருத்துக்கு நன்றி.

Anonymous said...

Dear Ayya,

really arrumayaana kathaai.

Nandri.

Anonymous said...

அன்பு நடராஜன்,

மிக்க நன்றி.

Anonymous said...

பொங்கல் வாழ்த்துக்கள்!அண்ணச்சி உடுங்க அவரவர் வினைப் பயன் அவரவருக்கு!இன்னக்கித்தான் கொஞ்சம் கொஞ்சமா படிச்சுட்டு வர்றேன்.

Anonymous said...

அன்பு நடேசன்,
கவலற்க.

Anonymous said...

Dear Sir,
Arumaiyana kadhai. Kadavulidam porul enru illai ehdiayum ketka kudadhu.Namaku enna kedaithu iruko adhu nam nalladharku enru ninaikiren.Kashtam vandhalum!!!

Neengal solvadhu pol kadavulidam charana gadhi dhan nalladhu.

En vaazhkaiyil patta kashtathil ellam, naan kadavulidam solli kondadhu idhu dhan " nee koduthu irukae. unaku theriyum, eppodhu seri seivadhu enru.
Nee seri seivai .Naan nambugiraen" idhu dhan en prayer ippodhum.En son kum adhu dhan solli koduthu iruken.

Unga blog miga nanraga irukiradhu.Unga katturaigal ellam innum padikavillai.Padikiraen.

Anonymous said...

அதுதான் நல்லது. நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் வழியும் அதுதான். ஆண்டவனிடம் சொல்லிவிட்டோம். அவன்தாள் பணிந்து விட்டோம் என்னும் திருப்தி மிஞ்சும். அதுவே மன அழுத்தத்தைக் குறைக்கும்.

இருப்பதைக்கொண்டு வாழ்வதே மேல்.