தத்துவங்கள் 96
********************
திருமந்திரம்:
"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய் திருந்த புறநிலை
ஓது மலங்குண மாகுமா தாரமோ
டாதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே."
கருவி = தத்துவம்
ஏதம் =குற்றம்
பொய்யுலகு = தோன்றி ஒடுங்கும் நிலை இல்லாத உலகம்
குருதி = இரத்தம்
உட்கு = பயம், வெட்கம்
மடி = அடங்குதல், மடங்குதல், சோம்பல்
இவறன்மை = அசட்டை, ஆசை, உலோபம்
மிடறு = தொண்டை
கூறு | ||
நிலம் | மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை | 5 |
நீர் | நீர், குருதி, மூளை, கொழுப்பு, விந்து | 5 |
தீ | ஊண், உறக்கம், உட்கு, உடனுறவு, மடி | 5 |
வளி | ஓடல், இருத்தல், நடத்த, கிடத்தல், தத்தல் | 5 |
வெளி | வெகுளி, இவறன்மை, மயக்கம், செருக்கு, பொறாமை | 5 |
செய்தற்கருவி | பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல், மகப்பெறுதல் | 5 |
அறிவுவளி | உயிர்க்காற்று, மலக்காற்று, தொழில்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று | 5 |
தொழில்வளி | தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று | 5 |
நாடி | இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, இடக்கண் நரம்பு, வலஞ்செவி நரம்பு, உள்நாக்கு நரம்பு, இடச்செவி நரம்பு, வலக்கண் நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு | 10 |
ஓசை | நுண்ணோசை, நினைவோசை, மிடற்றோசை, செவியோசை | 4 |
முப்பற்று | பொருள் பற்று, புதல்வர் பற்று, பொய்யுலகுப் பற்று | 3 |
முக்குணம் | அமைதி, ஆட்சி, அழுந்தல் | 3 |
60 |
0 Comments:
Post a Comment