Friday, December 28, 2007

அகர முதல எழுத்தெல்லாம்

அகர முதல எழுத்தெல்லாம்
**********************************


உலகுக்கெல்லாம் ஆதிபோல் "அ" விளங்குகிறதெனலாம்.
"அ"காரத்தின் பிண்டவிளக்கம்:


"அ"எழுதும்போது முதலில்எழுதுகோலைக் குத்துகிறோம். அது ஊன்றல். அது வாமை. அப்படின்னா, மண்ணாகிய பிருதிவி

சுழித்தல் - குத்திட்டு ஒரு சுழி சுழிக்கிறமா இல்லையா? அந்த சுழி ஜேஸ்டை.
இதை சேட்டைன்னும் சொல்வாங்க. இது நீருக்கு அதிபதியான சக்தி.

விசிரிம்பித்தல் - சுழிச்சதுக்கப்புறம் கீழ வளைக்கிறோம். அதுதான்.
அதுரவுத்திரி சக்தி. அக்கினிக்கு அதிபதி.

மடித்து மேலேறுதல் - வளைச்சதுக்கப்பறம் மடித்து மேலேறுகிறோம். அது
காளிசக்தி. இது வாயு சக்திதான்.

அங்கேருந்து கீழே வருகிறோம் - அதன் பெயர் கலவி கரணி. அப்படின்னா
ஆகாயசக்தி - இதுக்கு ஈசன் பீமர்.

அப்படியே மேலேத்துறோம். அது பலவி கரணி. அது என்னான்னா,
சந்திரன்கிட்டேயிருந்து பலத்தை விளைவிக்கும் சக்தி.

கோட்டுக்கு மேலே போயிட்டமா? சரி கீழே இறங்குகிறோம்.
அது கீழ்தாழல் - பலப்பிரமதனி - சூரியனிடம் பரவியிருக்கும் சிவசக்தி.- அதிபதி - உக்கிரர்.

கீழே இறங்கி நடுவில் கொஞ்சம் மூச்சு வாங்குறோம். அங்கே நடுவிலே
ஒருகுத்து. அது செங்குத்துக் கோட்டின் மையம். அது சர்வபூத தமனி.

தமனிஎன்றால் வன்னி மரம். அது அக்கினி. சர்வபூதமென்றால் ஐம்பெரும்
பூதங்களாகிய, நிலம், நீர், மண், காற்று, ஆகாயமாம். இந்த இடத்தில்தான்
எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள்.

வரிவடிவாதல் - மனோன்மணி - மையப் புள்ளியிலிருந்து நேரா கீழிறங்கினால்
"அ"வாகிவிடும். இதுதான் சர்வசக்தி.

ஆக "அ"காரமே சர்வ சக்தி. விந்து சக்தி.


"அ"காரம் 12 பிரிவுகளாம்.

1.விந்து - சூரிய ஒளி
2.நாதம் - பெரிய நாதம்
3.பரவிந்து - சந்திர ஒளி
4.பரநாதம் - நாதம்
5.அபரவிந்து - நற்சேத்திர ஒளி
6.அபரநாதம் - நாதம்
7.திக்கிராந்தம் - அருகிய ஒளி, மின்னல்
8.அதிக்கிராந்தம் - ஒலி
9.வாமசத்தி
10.ஜேஸ்டசத்தி
11.ரெளத்திர சத்தி
12.காளி சத்தி

மூலாங்கப் பிரணவமாகிய அகர இலக்கணம்(தெரிந்தவரை)

1.ஊன்றல் - வாமை
2.சுழித்தல் - ஜேஸ்டை
3.விசிரிம்பித்தல் - ரெளத்திரி
4.மடித்து மேலேறல் - காளி
5.அங்கிருந்து கீழ்வரல் - கலவி கரணி
6.மேல்புடை பெயர்தல் - பலவி கரணி
7.கீழ்தாழல் - பலப்பிரமதனி
8.கீழூன்றி நிற்றல் - சர்வபூத தமனி
9.வரிவடிவாதல் - மனோன்மணி

(இதில் விந்து நாதம் முதலிய நவநிலைகளுமுள)
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் விளக்கியது.

அரபியில் : ஆலி*ப் என்றால் (பிண்டத்தில்) புருவமத்தி.

மகாமே ஜபறூத்தின் திக்ரு 'அல்லாஹ்'.

ஹக்கீகத்திற்குரிய இத்திக்ருவைச் செய்யும்போது அவர்களுடைய
செவிகளுக்குக்கூடக் கேட்காத அளவிற்கு உச்சரித்தல் வேண்டும்.

"விடுமூச்சில் விசைவிசையா யேத்திறக்கும் செய்ய
இதமாக முக்கோண மாயிருந்து கொண்டு
இரு முழங்கால் மீதிலவர் இரு முழங்கை யிருத்தி
விதமென்ன விற்போலே வளைந்து தலை குனிந்து
விழித்து இரு பார்வை நடு புருவத்தில் நிறுத்தி
அது நிலையில் அலிபான முச்சுடரை நினைந்து".

ஆக, அலி*ப் என்பது முக்கலையொன்றும் இடமே.
இதுவே எல்லாவற்றிற்கும் ஆதாரத் தானம்.

இப்போது, திருவள்ளுவரின் முதல் குறளைப் படிக்கத் தெளிவாகும்.

"அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு."

இவையே, சாமவேத உபசார பூசையின்போது பலுக்கப்படும் மந்திரங்கள்.
வாமதேவாய நமோ
ஜ்யேஷ்டாய நம
ச்ரேஷ்டாய நமோ
ருத்ராய நமஹ
காலாய நமஹ
கலவி-கரணாய நமோ
பலவி-கரணாய நமோ
பலாய நமோ
பல-ப்ரமதனாய நமஹ
சர்வ பூத தமனாய நமோ
மனோன்-மனாய நமஹ
(செங்கிருதம் எழுதியதில் தவறிருக்கலாம்)

9 Comments:

Anonymous said...

நன்றி ஞானவெட்டியான் அவர்களே,

குறளுக்கு மிகவும் விரிவான விளக்கம் அளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி.இதை எங்கள் குழுவில் நண்பர்கள் பார்வைக்கு இடுகிறோம்.

Anonymous said...

மிக்க நன்றி முத்தமிழ் குழுமம்.

Anonymous said...

ஞான வெட்டியான் அவர்களுக்கு

உங்கள் பதிவை எங்கள் குழுவில் இட்டதற்கு எங்கள் குழு உறுப்பினர்களில் ஒருவரான அரங்கர் இட்ட கருத்துக்கள்.உங்கள் பார்வைக்கு
-------------------------------

நல்ல முயற்ச்சியிது.

இவர் உழைப்புக்குத் தக்க பலனை நிச்சயமாக தமிழ்கூறு நல்லுலகம் அவருக்கு வழங்கும். நிச்சயமாக இது ஒரு இடைவெளியை இட்டு நிரப்பும் என்பதில் ஐயமில்லை.

தெளிவாகத் தொட்டுத் தொட்டு எழுதுகிறார்; ஆனாலும்,

இன்னும் தெளிவாக கருத்துகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைத்து எழுதலாம். கொஞ்சம் கூடுதலான நேரம் செலவிடவேண்டி வரலாம். ஆனால் தொடர்ச்சியாக[கோர்வையாக] இடையீடுபடாமல் வரும்.

அதேபோன்று இன்னும் நீர் கலந்து குழைவாகப் பிசைந்து தந்தால் குழந்தைகள் உண்ணவும் சீரணிக்கவும் எளிதாகும்; என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. அனைவராலும் படிக்கப்பட வேண்டியது தானே வள்ளுவம்? சரியா?

என்ன கொஞ்சம் மிகுதியான பக்கங்களும், நேரமும் தேவைப்படலாம். பார்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். ஆண்டாண்டுகளுக்காய் நிலைக்கப்போவது.

இது என் கருத்து. அவ்வளவே.

செங்கிருதத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். யாதொரு பிழையுமில்லை.
[செங்கிருதம் என்ற பிரயோகத்தை முதன்முறையாகக் கேட்கிறேன். நன்றிகள்.]

வாழ்த்துக்கள்!


அன்புடன்,
------------
அரங்கன்.

Anonymous said...

அன்பு அரங்கரே,
மிக்க நன்றி.

//இன்னும் தெளிவாக கருத்துகளுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைத்து எழுதலாம். கொஞ்சம் கூடுதலான நேரம் செலவிடவேண்டி வரலாம். ஆனால் தொடர்ச்சியாக[கோர்வையாக] இடையீடுபடாமல் வரும்.//

தங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆயினும் ஞானக் கருத்துக்கள் உணர்வாலன்றி எழுத்தால் இயம்புதல் கடினம். அவரவர் உணர்ந்து பார்த்தல் வேண்டும்.

அத்துடன் மறைபொருட்களை வெளிப்படையாக விள்ளவியலாது.
இருப்பினும் முயலுகிறேன்.

Anonymous said...

சிறந்த படைப்பு ஞானவெட்டியான் அவர்களே, பலமுறை உஙகள் பதிவுக்கு வந்துள்ளேன். முதலெழுத்துக்கே இத்துனை எனில், இறைவா!

கற்றது கைமணளவு கல்லாதது உலகளவு மெய்ப்பித்துவிட்டதே.

மேலும் தொடருங்கள்.

Anonymous said...

அன்பு சிவமுருகன்,
//சிறந்த படைப்பு ஞானவெட்டியான் அவர்களே,//

நன்றி.

//கற்றது கைமணளவு கல்லாதது உலகளவ//

அதுவே உண்மை.

Anonymous said...

"அ" விற்குள் இத்தனை விஷயங்களா?

பிரமிப்பாக இருக்கிறது! நான் இன்னும் தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கிறது என்று!

Anonymous said...

எனக்கு தலை சுத்துது. ஆனால் உங்க மேலே எந்த த்ப்பும் இல்லைய்யா.

Anonymous said...

அன்பு சின்னப் பிள்ளை,
மிக எளிதாகத்தானே விளக்கியுள்ளேன்.