Friday, December 28, 2007

9.தசநாடி சுவாசமதுஞ்

ஞானம் எட்டி
***************

9.தசநாடி சுவாசமதுஞ் செனித்த வாறுஞ்
.........செகதலத்தி லெனைப்பழித்த செய்தி வாறும்
அசைவதிருந் தாக்கை யசையாதவாறு
.........மடிநடுவு முடிவான கற்ப வாறும்
பசைந்தமண்ணீ ருப்புவுவ ரெடுத்த வாறும்
........பஞ்சபட்சி யஞ்சுநிலைத் திருந்த வாறும்
இசையும்தச தீட்சைமதி ரவியின் வாறு
........மிராசயோ கத்தினருள் காப்புத் தானே.

தசநாடிகளும், தச வாயுவும் உண்டான விதத்தையும், இவ்வுலகின்கண் என்னைப்பழித்த விதத்தினையும், இத்தேகத்தை அழியாமலிருத்தி வைக்கவல்ல வழியையும், ஆதிநடு அந்தமாயுள்ள கற்பங்கள் சாதிக்கும் விதியையும், பூமிநாதத்தை எடுக்கும் விதத்தையும், இவ்வுடலில் பஞ்சபட்சி நிலைத்திருக்கும் விதத்தையும், தச தீட்சை (தீக்கை)யின் வழியையும், சந்திர சூரியன்களின் தன்மையையும், நான் சொல்லும்பொருட்டுச் சிவராசயோகத்தின் திருவருள் காக்க.

0 Comments: