Friday, December 28, 2007

10.யோகாதி யோகநிலை

ஞானம் எட்டி
***************

10.யோகாதி யோகநிலைத் திருந்த போக்கு
.............. முற்பனமாங் கற்பமுண்டு சாகாப் போக்கும்
வேகாத் தலையுமதி ரவியின் போக்கும்
............ வெண்சாரை கருநெல்லி விதித்த போக்கும்
போகாப்புனலுஞ் சவர்க்காரப் பூநீர்ப் போக்கும்
............. பூதலமெ லாமகிழும் பொருளின் போக்கும்
ஆகாத மனிதர்களை யகற்றும் போக்கு
.......... மசடில்லா மாதுரசக் குளிகை காப்பாம்.

யோகமும், மகாயோகமும் நிலைத்திருந்த விதத்தையும், கற்பம் உண்ணவேண்டிய முறை பிறழாது உண்டு சாகாமல் செத்து வாழும் விதத்தையும், வேகாத்தலையையும், சந்திர சூரிய கலைகளின் மார்க்கத்தையும், வெண்சாரை, கருநெல்லி ஆகியவற்றின் விவரத்தையும், எக்காலத்தும் நீங்காத சுத்த சல மார்க்கத்தையும், சவர்க்காரமென்னும் பூநீற்றின் மார்க்கத்தையும், அதனால் பூவுலகிலுள்ளோர் பொருளுடையவர்களாக வேண்டிய முறையினையும், இத்தொழிலுக்குப் பயன்படாத மனிதர்களை நீக்கிவிடுகின்ற விதத்தையும் (என் ஞானாசிரியனின் கருணையால் இயம்பும்பொருட்டு) வாலைரசமணி காக்கட்டும்.
( இப்பாடலில் மறைமொழிச் சொற்கள் பலவுள்ளதாலும், அதை விளக்க உத்திரவு இல்லாததாலும் அப்படியே விளக்கியமைக்கு அருள்கூர்ந்து பொருத்தருள்க.)

0 Comments: