Friday, December 28, 2007

11.குளிகைரச மாது

ஞானம் எட்டி
***************

11.குளிகைரச மாதுகற்பக் குகையின் மூலங்
.............. குருபூசை குண்டலியின் வாசி மூலம்
வழியறியு மவிழ்தமொடு நோய்கள் தீர
............ வழலைமுப்பு வைத்தியமுங் கிருத லேகியம்
விழிமடவா ளம்பிகைப்பெண் ணருளி னாலே
............. விவேகமணி மாத்திரையும் பஸ்பந் தானும்
தெளிவுபெறுஞ் சுண்ணமொடு செந்தூ ரங்கள்
........... திராவகமுஞ் செயநீருஞ் சென்னி காப்பாம்.

ரசக்குளிகை செய்யும் முறையினையும், அது நின்று முடிவு பெறுவதற்கு ஆதாரமாய் இருக்கத் தக்க பூசைசெய்யும் வழியினையும், குருமூல குண்டலி பூசையாகிய இவைகளை முடிக்கும் விவரத்தையும், தாரணை செய்யவேண்டிய மார்க்கத்தினையும், உடலிலுண்டாகும் பிணிகள் தீரும்பொருட்டு மருந்துகளாகிய வழலை என்னும் முப்பூவின் மார்க்கத்தையும், கிருதம், லேகியம், மாத்திரை, பஸ்பம், சுண்ணம், செந்தூரம், திராவகம், செயநீர் ஆகியவைகள் செய்யும் விதத்தினையும், உமாபரமேசுவரியின் கருணையால் சொல்லுதற்கு அவளே காப்பு.

தாரணை = மனதை ஒருநிலைப்படுத்தும் பொறை நிலையாகும்.

0 Comments: