Friday, December 28, 2007

12. சென்னிவளர் சிவசிங்கா

ஞானம் எட்டி
***************

12. சென்னிவளர் சிவசிங்கா தனத்தின் மேவுஞ்
.......... சிதம்பரமா நடனசபை சித்ர கூடம்
வன்னிமதிப் பிரகாச கமல பீட
........... மதுரவின்ப வமிர்தசர் வாணிபீடம்
உன்னிதமாய்க் கன்னியெனக் கமிர்த மூட்டி
.......... யுயிருமுடல் நிலைத்திடவு பாயஞ் சொன்னாள்
இன்னிமித்தம் பொருத்தமெனக் களித்தஞ் ஞான
.......... விருளகற்றிப் பானரச மீந்தாள் காப்பாம்.

உயர்ந்த சிவனுடைய சிங்காதனத்திலிருக்கின்ற சிதம்பர நடனசபையாகிய சித்திரக் கூடத்தின்கண் ஒளிபொருந்திய சந்திரன் போலும் பிரகாசத்தை வாய்த்த கமல பீடமும், இன்ப அமிர்த சர்வாணி எழுந்தருளியிருக்கும் பீடமும், அதில் எழுந்தருளியுள்ள கன்னிகையானவள், இந்நூலை ஞாலத்தோருக்கு அருள என்மீது கருணைவைத்து, உயிரும் உடலும் நிலைக்கும்படியான உபாயத்தை உபதேசித்துப் பின் என் அஞ்ஞான அந்தகாரத்தைப் போக்கித் திருவருள் ஞானமாகிய பானரசத்தை எனக்களித்தாள். அவளே காப்பு.

0 Comments: