ஞானம் எட்டி
**************
13.இருள்தனை யகற்றுஞ் சோதி யிகபரவெளியே போற்றி
அருள்தரு ஞான தேசி யகத்தீச ரருளி னாலே
திருவுரு தவள வாணி சிரோமணிக் கமலந் தன்னில்
அருமலர் பொழியு ஞான வமிர்தசெந் தமிழைச் சொல்வாம்.
எனக்கிருக்கும் அஞ்ஞான இருளைத் துரத்தும் சோதியாகவும், இம்மை மறுமைகளாகிய வெளிகளைப் பாதுகாத்துத் திருவள் செய்யும் ஞானாசிரியனுமான அகத்திய முனிவருடைய திருவருளால் அழகிய வெண்பட்டு உடுத்தியிருக்கும் வாணியாம் சரசுவதியின் மலர்ப்பாதங்களில் மலரிட்டு அருச்சித்து ஞானாமிர்தமாம் இஞ்ஞானம் எட்டியைச் சொல்வோம்.
Friday, December 28, 2007
13.இருள்தனை யகற்றுஞ்
Posted by ஞானவெட்டியான் at 12:57 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment