ஞானம் எட்டி
***************
14. நந்தியொளிப் பிரகாச வட்டத் துள்ளே
............ நற்கமல மாயிரத்தெட் டிதழைப் போற்றி
உந்திநிலை யறிந்ததிரு மூலர் பாத
.......... முவமையுள்ள காலாங்கி போகர் பாதஞ்
சிந்தையுள்ள மகிழ்ந்த சட்டை முனியின்
......... பாதஞ் சிவமயங்கண்ட கோரக்கர் பாதம்
அந்திபக லறிந்த விடைக்காடர் பாத
......... மருளுஞ் சகநாதர் பதமர்ச்சித் தேனே.
நம் தீயொளிப் பிரகாசம் வீசும் வட்டத்துள்ளே உள்ள ஆயிரத்தெட்டிதழ் தாமரையிதழைப் போற்றி, உகாரத்தில் உள்ள தீ நிலையறிந்த(மணிபூரகம்) திருமூலர், உயர்ந்தவரான காலங்கிநாதர், போகநாதர், சட்டைமுனிவர், சிவமயத்திலே திளைத்திருந்த கோரக்கர், உடலில் இராப்பகல் கண்ட இடைக்காடர், அருள்செயும் செகநாதர் ஆகியோரின் திருவடிகளை அருச்சித்தேன்.
Friday, December 28, 2007
14. நந்தியொளிப் பிரகாச
Posted by ஞானவெட்டியான் at 12:58 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment