Friday, December 28, 2007

15. மதியிருந்து குமுறி

ஞானம் எட்டி
***************

15. மதியிருந்து குமுறி விளை யாடும் வீடு
.............. மகத்தான செங்கதிரோன் மகிழ்ந்த வீடு
பதியிருந்து விளையாடு மூல வீடு
............. பத்திதரும் சித்திதரும் பரம வீடு
துதிபெறவு நாற்சதுர மேலு நின்று துலங்கு
........ மெழிற் கணபதி வல்லபையைப் போற்றி
நிதிபெறவு மெனையீன்ற குருவின் பாதம்
.......... நெகிழாம லனுதினமுங் காப்புத் தானே.

சந்திரன் விளையாடும் வீடு, மகத்தான சூரியன் மகிழ்ந்திருக்கும் வீடு, பதி,பசு,பாசத்தில் பதியிருந்து விளையாடும் மூலவீடு, பத்தியும், அதன்பின் சித்தியும் தரும் பரமனின்வீடு, யாவரும் துதிக்க நாற்கோணத்தின் மேல்விளங்கும் அழகிய கணபதியையும் வல்லபையையும் போற்றி, ஞானப்பிறப்பெடுக்கவைத்து ஞானம் ஈந்த அப்பன் குருவின் பாதங்களையும் போற்றித் துதித்து, காக்கவென இறைஞ்சுகிறேன்.

0 Comments: