Friday, December 28, 2007

16. திருவிருந்து கனலெழுந்து

ஞானம் எட்டி
**************
16. திருவிருந்து கனலெழுந்து ஆடும்வீடு
........... சிறந்தசத்தி வல்லபைதன் கணவ னான
மருவிருந்து கொஞ்சு தமிழ் நாவில்மேவ
.......... மகிழ்ந்த மதகரி யினிரு தாளைப் போற்றி
கருவிருந்த பெருவீடு தாண்டி யப்பால்
......... கண்குளிர நின்று நடுவணையி லேறி
மருவியுயிர் நாதவிந்து ஆயி பாதம் வணங்கியிந்த
.............. நூல் வகையைப் புகல்வே னாண்டே.

இலக்குமியானவள் எழுந்தருளி இருந்து அக்கினியுடன் காக்கும் வீடும், சக்தி வல்லபையின் தமிழ் கொஞ்சும் இதழ்களில் பொருந்தும் மதகரியாம் கணேசனின் இருதாள் போற்றி, கரு உதிக்கும் விந்துவீட்டைக் கடந்து அப்பால் ஞானக் கண்குளிர நின்று நடுவணையில் ஏறி நாதவிந்து சொரூபியாம் ஆதியின் திருவடிகளை வணங்கி, இந்நூலின்வகையைச் சொல்வேன் என் ஆண்டே (எசமான்).

0 Comments: