Friday, December 28, 2007

17. தந்தைதாய் கருவதனி

ஞானம் எட்டி
***************
17. தந்தைதாய் கருவதனி லுதித்த வாறுந்
......... தாரணியில் கருத்திரண்டு பிறந்த வாறும்
அந்தமுடன் சாதிகுலம் வகுத்த வாறு
.......... மவனிதனிற் பெரியோர்க ளறிந்த வாறும்
சிந்தைதனி லஞ்செழுத்தைப் போற்றி செய்து
........ செப்புகிறே னிந்நூலை யிகழ வேண்டாம்
தந்திரமாய் முக்கோணந் தன்னில் நின்ற
...... தந்திமுகன் கமலபதங் காப்புத் தானே.

தாய்தந்தையரால் கருப்பத்தில் தோன்றியதும், உலகில் பிறந்ததும், உடனே சாதிகுலங்கள் ஏற்பட்டதும், உலகில் ஆன்றோர்கள் உணர்ந்ததும், மனதில் ஐந்தெழுத்து மந்திரத்தை நிலைநிறுத்தி இந்நூலைச் சொல்லுகிறேன்; யாரும் இகழவேண்டாம். இந்நூலை முறையாகச் சொல்ல தந்திரத்தால் முக்கோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தந்திமுகனாம் கணேசனின் தாமரைத் திருவடிகள் காக்க.

0 Comments: