Friday, December 28, 2007

18. கதிரொத்த விடந்தனி

ஞானம் எட்டி
***************
18. கதிரொத்த விடந்தனிலே யிலகுஞ் சோதி
.......... கனகரத்ன மிலகுதிரு மண்ட பத்தில்
மதியொத்து நின்றிலங்குஞ் சுவாதிட் டானம்
........ வளர்ந்தவித ழிம்மூன்றா மங்கு லத்தில்
நிகரொத்த பிரமன் சரசு வதியின் பாதம்
........ நினைந்துருகித் தாளிணையைப் போற்றி செய்து
உதிரத்தில் சுக்கிலந்தான் வந்த வாறு
........ மோரெழுத்தா நாதவிந் தமைத்த வாறே.

கனகரத்தினமாய் விளங்கும் திருமண்டபத்தில் அறிவுக்கதிர் வீசும். அம்மண்டபமே சுவாதிட்டானம். அங்குள்ள ஆறிதழில் வசிக்கும் பிரமன், சரசுவதி ஆகியோரின் இருதிருவடிகளையும் போற்றி, உதிரத்தால் எப்படி சுக்கிலமாம் விந்துண்டானதோ அதற்குக் காரணமாம் ஓரெழுத்துத் தத்துவத்தை அமைத்த வகையையும் உரைக்கிறேன்.

0 Comments: