Friday, December 28, 2007

19. சொல்லரிய மந்திரத்து

ஞானம் எட்டி
***************
19. சொல்லரிய மந்திரத்துக் கெட்டா வீடு
.............. சோதிமணி பூரகத்தி லமைந்த மூர்த்தி
வெல்லரிது நாபியதின் கமலத் துள்ளே
............ விளைந்த விதழீரைஞ்சு பத்து மேலும்
வல்லபமாய் நின்றிலங்கு மாலின் தேவி
....... வளர்ந்தசபைத் திருமாலை வணங்கிப் போற்றித்
தொல்லுலகி லுள்ளபெரி யோர்கள் பாதந்
......... துதித்திந்நூல் விளம்புகின்றே னாண்டே கேளீர்.

சொல்லுதற்கு அரிதான மன்திறத்திற்கு(மனிதனின் திறத்திற்கு) எட்டாத வீடான ஒளிவீசும் மணிபூரகத் தானத்தில் வசிக்கும் மூர்த்தியாம் திருமாலை(மாயனை) வணங்கிப் போற்றி, வெல்ல அரிதான நாபிக்கமலத்தில் செறிந்த பத்திதழ்மேல் வல்லபசத்தியாம் குண்டலி சத்தியாய் நின்று விளங்கும் மாலவனின்(விட்டுணு) தேவியாம் இலக்குமியயும், பழமையான இவ்வுலகில் உள்ள பெரியோர்களின் பாதம் துதித்தும் இந்த நூலைச் சொல்லுகிறேன், கேளுங்கள்எசமானே! (ஆண்டே).

0 Comments: