ஞானம் எட்டி
***************
20. வட்ட மிட்ட சட்கோணப் பாரின் மேலும்
.......... வளர்ந்த வித மீராறா மங்கு லத்தில்
திட்டமிட்ட வனாகதத்தில் வீற்றி ருந்த
........ சிறந்தருளும் ருத்திர னுத்திரியைப் போற்றி
வெட்டவெளி வேதமறை நான்கு மோதும்
......... வேத மெலாந் திருநீறா யான வாறும்
அட்ட திசை யறிந்துணர்ந்த பெரியோர்பாத
......... மைம்பத் தோ ரட்சரமுங் காப்புத் தானே.
வட்டமிட்டுள்ள அறுகோணத்தின்மேல் வளர்ந்திருக்கின்ற பன்னிரு இதழ்களையுடைய அநாகதத் தானத்தில் வீற்றிருக்கும் உருத்திரன், உருத்திரியைப் போற்றி, நான்கு வேதங்களால் வெட்டவெளியாய் விளக்கப்படும் திருநீறாய் ஆனவாறும் (வழியான தெளிவான விபூதிதன்னை) எட்டு திசைகளையும் அறிந்துணர்ந்த பெரியோர்களுடைய திருவடிகளும், ஐம்பத்தொரு அட்சரங்களும் காப்பாகும்.
Friday, December 28, 2007
20. வட்ட மிட்ட சட்கோண
Posted by ஞானவெட்டியான் at 1:04 PM
Labels: ஞானம் எட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment