Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 9

அரன் ஆயிரம் - 9
******************
ஓம் துணைமாலைநாயகி மணாளா போற்றி

ஓம் துணைவா போற்றி

ஓம் துயர் தீர்த்த நாதா போற்றி

ஓம் தூண்டா மணி விளக்கே போற்றி

ஓம் தூய நெறியே போற்றி

ஓம் தூய்மையும் அறிவும் தருவோய் போற்றி

ஓம் தூல பஞ்சாக்கரமே போற்றி

ஓம் தெளிவே போற்றி

ஓம் தெளிவினுள் சிவமே போற்றி

ஓம் தென்பாண்டி நாட்டானே போற்றி

ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி

ஓம் தேசு வடிவே போற்றி

ஓம் தேவரானாய் போற்றி

ஓம் தேனார் அமுதே போற்றி

ஓம் தையல்நாயகி மணாளா போற்றி

ஓம் தொழுதகை துன்பம் துடைப்போய் போற்றி

ஓம் தொலையாச் செல்வமே போற்றி

ஓம் தொல்லை போக்குவோய் போற்றி

ஓம் தோகையாம்பிகை மணாளா போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோணியப்பா போற்றி

ஓம் தோழா போற்றி

ஓம் நக்கனே போற்றி

ஓம் நஞ்சுண்டவனே போற்றி

ஓம் நடவரசே போற்றி

ஓம் நடுசெய்ய வல்லானே போற்றி

ஓம் நடுதறியப்பா போற்றி

ஓம் நதிசேர் செஞ்சடையானே போற்றி

ஓம் நந்தி வாகனா போற்றி

ஓம் நம்பனே என்கோவே போற்றி

ஓம் நமசிவாய போற்றி போற்றி

ஓம் நமனை வென்றவா போற்றி

ஓம் நரியைப் பரியாக்கினாய் போற்றி

ஓம் நல்லநாயகி மணாளா போற்றி

ஓம் நல்லன தருவோய் போற்றி

ஓம் நல்லூர்வாழ் நாதா போற்றி

ஓம் நலிந்தோர்க்கு அருள்வோய் போற்றி

ஓம் நற்கதி தருவோய் போற்றி

ஓம் நற்துணையப்பா போற்றி

ஓம் நற்பதம் நல்குவோய் போற்றி

ஓம் நறுங்குழல் நாயகி மணாளா போற்றி

ஓம் நறுமலராய் நாறும் மலரடி போற்றி

ஓம் நாகமணிந்தவா போற்றி

ஓம் நாகவிடங்கா போற்றி

ஓம் நாகனாதா போற்றி

ஓம் நாகேச்சரத் துளானே போற்றி

ஓம் நாசியே போற்றி

ஓம் நாசியின் மணமே போற்றி

ஓம் நாசியில் மூன்றானவா போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நாதமே போற்றி

ஓம் நாத ஞானம் அருள்வோய் போற்றி

ஓம் நாதவிந்துவே போற்றி

ஓம் நாரை வடிவாகினாய் போற்றி

ஓம் நாவலேசுவரா போற்றி

ஓம் நாவே போற்றி

ஓம் நாவில் இரண்டானவா போற்றி

ஓம் நாவில் சுவையே போற்றி

ஓம் நாவில் நடமிடுவாய் போற்றி

ஓம் நான்கு வேதம் ஆனாய் போற்றி

ஓம் நான்மறை முதல்வா போற்றி

ஓம் நித்த சங்காரா போற்றி

ஓம் நித்தா போற்றி

ஓம் நித்திரை நீக்கி அருள்வோய் போற்றி

ஓம் நித்திய கல்யாணி மணாளா போற்றி

ஓம் நித்தியப் பொருளே போற்றி

ஓம் நிதி தந்து அருள்வோய் போற்றி

ஓம் நிம்மதி தந்து அருள்வோய் போற்றி

ஓம் நிமலாபோற்றி

ஓம் நியமமே போற்றி

ஓம் நிராமயனே போற்றி

ஓம் நிருத்தனே போற்றி

ஓம் நிலவிடங்கா போற்றி

ஓம் நிறைவே போற்றி

ஓம் நினைவானாய் போற்றி

ஓம் நீதியே போற்றி

ஓம் நீரில் நான்கானாய் போற்றி

ஓம் நீலகண்டா போற்றி

ஓம் நீலக்குடி ஈசா போற்றி

ஓம் நீலாங்கமேனியாள் மணாளா போற்றி

ஓம் நீள் உலகு எங்கும் நிறைந்தாய் போற்றி

ஓம் நீறு கொப்பளித்த மார்பா போற்றி

ஓம் நுணுக்கரிய நுண்ணுணர்வே போற்றி

ஓம் நூலால் உணரா நுண்பொருளே போற்றி

ஓம் நெய்யில் நற்சோதியே போற்றி

ஓம் நெற்றிக் கண்ணாய் போற்றி

ஓம் நெறியே போற்றி

ஓம் நெறிகாட்டும் நாயகா போற்றி

ஓம் நோக்கரிய நோக்கே போற்றி

2 Comments:

Anonymous said...

அய்யா,

மிக அருமை!!

மிக்க நன்றி.

Anonymous said...

அன்பு சிவபாலன்,
மிக்க நன்றி.