Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 10

அரன் ஆயிரம் - 10
*******************
ஓம் பகுந்துண்பானே போற்றி

ஓம் பசுபதியே போற்றி

ஓம் பசும்பொன் மயிலாம்பாள் மணாளா போற்றி

ஓம் பஞ்சின் மெல்லடியாள் மணாளா போற்றி

ஓம் பட்டீசுரத்தாய் போற்றி

ஓம் படர்தரு கொம்பே போற்றி

ஓம் பட்டம்பக்க நாதா போற்றி

ஓம் படிக்காசு அளித்தநாதா போற்றி

ஓம் பண்மொழியம்மை மணாளா போற்றி

ஓம் பண்ணுறு கேள்வியே போற்றி

ஓம் பணிந்தார் பாவங்கள் தீர்ப்போய் போற்றி

ஓம் பத்தா போற்றி

ஓம் பத்து எனும் திருவடியே போற்றி

ஓம் பதஞ்சலி ஈசுவரா போற்றி

ஓம் பதிவட்டமே போற்றி

ஓம் பந்த பாசம் அறுப்போய் போற்றி

ஓம் பந்தாடு நாயகி மணாளா போற்றி

ஓம் பரங்கிநாதா போற்றி

ஓம் பரங்கருணை நாயகி மணாளா போற்றி

ஓம் பரஞ்சோதியே போற்றி

ஓம் பரஞ்சுடரே போற்றி

ஓம் பரமசிவனே போற்றி

ஓம் பரமயோகியே போற்றி

ஓம் பராயத்துறை நாதா போற்றி

ஓம் பருப்பதநாதா போற்றி

ஓம் பல்கோடி குணமுளாய் போற்றி

ஓம் பவள மேனியனே போற்றி

ஓம் பவனே போற்றி

ஓம் பல்லூழி படைத்தாய் போற்றி

ஓம் பவளக்கொடியம்மை மணாளா போற்றி

ஓம் பழம்பதிநாதா போற்றி

ஓம் பழமலைநாதா போற்றி

ஓம் பழனத்து எம்பிரானே போற்றி

ஓம் பழி தீர்த்து அருள்வோய் போற்றி

ஓம் பழியிலாய் போற்றி

ஓம் பழையாற்றுப் பரமா போற்றி

ஓம் பற்றற்ற பரமா போற்றி

ஓம் பற்றற்றார் பற்றும் பவள மலரடி போற்றி

ஓம் பற்றிய வினைகள் போக்குவோய் போற்றி

ஓம் பற்றிலா நெஞ்சம் அருள்வோய் போற்றி

ஓம் பறவையானாய் போற்றி

ஓம் பாசுபதேசுரா போற்றி

ஓம் பாசுபதம் தந்தாய் போற்றி

ஓம் பாட்டுக்கும் ஆட்டுக்கும் வல்லாய் போற்றி

ஓம் பாம்பாகினாய் போற்றி

ஓம் பார்ப்பதி பாகா போற்றி

ஓம் பார் முழுதும் ஆகினாய் போற்றி

ஓம் பார்வதியம்மை மணாளா போற்றி

ஓம் பால்வண்ணநாதா போற்றி

ஓம் பாலாம்பிகை மணாளா போற்றி

ஓம் பாலின் நன்மொழியாள் மணாளா போற்றி

ஓம் பாலின் நெய்யே போற்றி

ஓம் பாலுகந்த நாதா போற்றி

ஓம் பாலைவன நாதா போற்றி

ஓம் பாவினையாளருக்குப் பண்ணே போற்றி

ஓம் பிஞ்ஞகா போற்றி

ஓம் பிட்டுக்கு மண் சுமந்தாய் போற்றி

ஓம் பிணிதீர்க்கும் மருந்தே போற்றி

ஓம் பித்தா போற்றி

ஓம் பிரகேசுவரா போற்றி

ஓம் பிரமபுரிநாதா போற்றி

ஓம் பிரானே போற்றி

ஓம் பிரியா ஈசுவரா போற்றி

ஓம் பிருகந்நாயகி மணாளா போற்றி

ஓம் பிழைத்தார் பிழைப்பறிய சிவனடி போற்றி

ஓம் பிறப்பு இறப்பு இலாய் போற்றி

ஓம் பிறைமுடி அணிந்தாய் போற்றி

ஓம் பினாகபாணியே போற்றி

ஓம் புகலிடம் நீயே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் புந்தியுள் புகுந்தவனே போற்றி

ஓம் புரிகுழலாம்பிகை மணாளா போற்றி

ஓம் புராசத்தி மணாளா போற்றி

ஓம் புராந்தகா போற்றி

ஓம் புராண சிந்தாமணியே போற்றி

ஓம் புல்லானாய் போற்றி

ஓம் புலன் ஒடுக்குவோய் போற்றி

ஓம் புவன நாயகா போற்றி

ஓம் புவனிவிடங்கா போற்றி

ஓம் புழுவானாய் போற்றி

ஓம் புற்றிடங் கொண்டானே போற்றி

ஓம் புனலே போற்றி

ஓம் புனலினும் தண்ணியனே போற்றி

ஓம் புனிதா போற்றி

0 Comments: