Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 11

அரன் ஆயிரம் - 11
*******************
ஓம் பூங்கொடி நாயகி மணாளா போற்றி

ஓம் பூங்கோதை மணாளா போற்றி

ஓம் பூதநாயகா போற்றி

ஓம் பூந்துருத்திப் பொய்யிலியே போற்றி

ஓம் பூவனூர்ப் புனிதா போற்றி

ஓம் பூவினையாளருக்குப் பூவே போற்றி

ஓம் பெண்ணினோடு ஆணுருவாய் நின்றாய் போற்றி

ஓம் பெண்ணின்நல்லாள் அம்மை மணாளா போற்றி

ஓம் பெரியாய் போற்றி

ஓம் பெரியநாயகி மணாளா போற்றி

ஓம் பெருங்கருணைநாயகி மணாளா போற்றி

ஓம் பெரும்பற்றப் புலியூரானே போற்றி

ஓம் பெருநெறியே போற்றி

ஓம் பெருநெறி உய்க்கும் பேரரசே போற்றி

ஓம் பெருவெளியே போற்றி

ஓம் பேயானாய் போற்றி

ஓம் பைரவா போற்றி

ஓம் பொருளற்றோய் போற்றி

ஓம் பொறியழலாய் நின்றாய் போற்றி

ஓம் பொன் தூணே போற்றி

ஓம் பொன்னம்பலமே போற்றி

ஓம் பொன்னார் மேனியனே போற்றி

ஓம் பொன்னார் திருவடியே போற்றி

ஓம் போகாப் புனலே போற்றி

ஓம் போதமே போற்றி

ஓம் போதங் கடந்த பூரணமே போற்றி

ஓம் போரூர் நாயகா போற்றி

ஓம் மகமாயி மணாளா போற்றி

ஓம் மகரமாம் நாதமே போற்றி

ஓம் மகா காரண பஞ்சாக்கரமே போற்றி

ஓம் மகாலட்சுமீசுவரா போற்றி

ஓம் மகா லிங்கா போற்றி

ஓம் மங்கல நாயகி மணாளா போற்றி

ஓம் மங்களாம்பிகை மணாளா போற்றி

ஓம் மங்கையர்க்கரசி மணாளா போற்றி

ஓம் மங்கைநாயகி மணாளா போற்றி

ஓம் மட்டுவார் குழலம்மை மணாளா போற்றி

ஓம் மண்துலங்க ஆடி மகிழ்ந்தாய் போற்றி

ஓம் மண்ணில் ஐந்தானாய் போற்றி

ஓம் மண்டல ஈசுவரா போற்றி

ஓம் மணியே போற்றி

ஓம் மணியின் ஒளியே போற்றி

ஓம் மதம் நீக்கி அருள்வோய் போற்றி

ஓம் மதியே போற்றி

ஓம் மதிக்கு விருந்தே போற்றி

ஓம் மதிநதி சடையா போற்றி

ஓம் மந்திரமாம் சிவன்திருமேனி போற்றி

ஓம் மந்திரம் உரைக்கும் பொருளே போற்றி

ஓம் மந்திரமும் தந்திரமும் ஆன மலரடி போற்றி

ஓம் மயக்கம் தீர்ப்பாய் போற்றி

ஓம் மயக்கத்துள் தெளிவானாய் போற்றி

ஓம் மயானம் காப்போய் போற்றி

ஓம் மயிலை நாதா போற்றி

ஓம் மயிலாடு துறையனே போற்றி

ஓம் மரமானாய் போற்றி

ஓம் மலைமகள் மணாளா போற்றி

ஓம் மருள் நீக்குவோய் போற்றி

ஓம் மருவார் குழலியம்மை மணாளா போற்றி

ஓம் மலர்குழல் நாயகி மணாளா போற்றி

ஓம் மலர்மங்கைநாயகி மணாளா போற்றி

ஓம் மழுவாட்படையாய் போற்றி

ஓம் மறைக்காடா போற்றி

ஓம் மறைப்பே போற்றி

ஓம் மறையே போற்றி

ஓம் மறையின் வேரே போற்றி

ஓம் மறைப் பொருளே போற்றி

ஓம் மறையெனும் சிலம்பு அணிந்தாய் போற்றி

ஓம் மறையாப் பொருளே போற்றி

ஓம் மறையோன் தாள் போற்றி

ஓம் மனமணி விளக்கே போற்றி

ஓம் மனமே போற்றி

ஓம் மனக் குகை உறைவாய் போற்றி

ஓம் மனத்திற்கு விருந்தே போற்றி

ஓம் மனத்துணை நாதா போற்றி

ஓம் மன நலம் அருள்வோய் போற்றி

ஓம் மனமருட்சி நீக்குவாய் போற்றி

ஓம் மாசில்லாதான் தாள் போற்றி

ஓம் மாசிலாமணியே போற்றி

ஓம் மாண்புடைய நெறிதருவாய் போற்றி

ஓம் மாணிக்க வண்ணா போற்றி

ஓம் மாணிக்கக் கூத்தே போற்றி

ஓம் மாணிக்கத் தியாகா போற்றி

ஓம் மாதவன் தங்கை மணவாளா போற்றி

ஓம் மாதுமையம்மை மணாளா போற்றி

ஓம் மாதேவா போற்றி

ஓம் மாமணிச் சோதியாய் போற்றி

ஓம் மாமருந்தே போற்றி

ஓம் மாயூரநாதா போற்றி

ஓம் மாயோன் தேடிய மலரடி போற்றி

ஓம் மாவினையாளருக்கு முத்தியே போற்றி

ஓம் மாவெழுத்தே போற்றி

ஓம் மாழையங்கண்ணி மணாளா போற்றி

ஓம் மாற்றறிவரதா போற்றி

ஓம் மான்கன்றாம் சீவனே போற்றி

ஓம் மான்தோல் உடுத்தவனே போற்றி

ஓம் மான்மழு ஏந்திய கையனே போற்றி

0 Comments: