Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 12

அரன் ஆயிரம் - 12
*******************
ஓம் மின்னனையாளம்மை மணாளா போற்றி

ஓம் முக்கண்ணா போற்றி

ஓம் முக்கோண நாத ஈசுவரா போற்றி

ஓம் முத்தா போற்றி

ஓம் முத்தாம்பிகை மணாளா போற்றி

ஓம் முத்தழல் மேனியனே போற்றி

ஓம் முத்தமிழ் காவலா போற்றி

ஓம் முத்தனே போற்றி

ஓம் முதல்வா போற்றி

ஓம் முதலாகி நடுவாகி முடிவானவனே போற்றி

ஓம் முதுகுன்றம் அமர்ந்தோனே போற்றி

ஓம் முப்புரம் எரித்தாய் போற்றி

ஓம் முயலகன் மிதிகழலே போற்றி

ஓம் முருவல் பூத்த முகத்தழகா போற்றி

ஓம் முல்லைவன நாதா போற்றி

ஓம் முழங்கு துடிகொண்டோய் போற்றி

ஓம் முழுநீறு பூசியோய் போற்றி

ஓம் முழுமுதற் சோதியே போற்றி

ஓம் முளையே போற்றி

ஓம் முளைத்தெளு மூவிலை வேல்கொண்டோய் போற்றி

ஓம் முன்னே முளைத்த மலரடி போற்றி

ஓம் முனிவரானாய் போற்றி

ஓம் மூலமாகிய மும்மலம் அறுப்பாய் போற்றி

ஓம் மூவுருவின் முதலுருவே போற்றி

ஓம் மூவெழுத்தே போற்றி

ஓம் மூன்றினில் நின்றாய் போற்றி

ஓம் மெய்யனே போற்றி

ஓம் மெலியும் பிறையீர் போற்றி

ஓம் மேக நாயகா போற்றி

ஓம் மேகலாம்பிகை மணாளா போற்றி

ஓம் மேருவில் வீரா போற்றி

ஓம் மைமேவு கண்ணி மணாளா போற்றி

ஓம் மோகம் தீர்ப்போய் போற்றி

ஓம் மோனமே போற்றி

ஓம் மோனத்தே ஒளி காட்டுவோய் போற்றி

ஓம் யாக்கை துறந்தோனே போற்றி

ஓம் யாப்பே போற்றி

ஓம் யாழின் மென்மொழியம்மை மணாளா போற்றி

ஓம் யோக நயகா போற்றி

ஓம் வச்சிரத்தம்ப நாதா போற்றி

ஓம் வட்டமாம் பிரணவமே போற்றி

ஓம் வட்டக் கழலே போற்றி

ஓம் வடதளிச் செல்வா போற்றி

ஓம் வடிவுடை அம்மை மணாளா போற்றி

ஓம் வடுவகிர்க் கண்ணம்மை மணாளா போற்றி

ஓம் வண்டமர் பூங்குழலி மணாளா போற்றி

ஓம் வந்த நற்பயனாகி நின்றாய் போற்றி

ஓம் வலக் கண்ணாய் கதிரவனைக் கொண்டோய் போற்றி

ஓம் வஞ்சுழி நாதா போற்றி

ஓம் வலம்புரநாதா போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வளர்தலும் தேய்தலும் இல்லாய் போற்றி

ஓம் வளியே போற்றி

ஓம் வன்மீகநாதா போற்றி

ஓம் வனப்பே போற்றி

ஓம் வனமுலைநாயகியம்மை மணாளா போற்றி

ஓம் வாக்கால் மறைவிரித்தாய் போற்றி

ஓம் வாக்கில் துலங்குவோய் போற்றி

ஓம் வாசியே போற்றி

ஓம் வாஞ்சிநாதா போற்றி

ஓம் வாணெடுங்கண்ணியம்மை மணாளா போற்றி

ஓம் வாமதேவா போற்றி

ஓம் வாய்மூர்நாதா போற்றி

ஓம் வாயினை வாழ்த்த வைத்தாய் போற்றி

ஓம் வார்வினை தீர்ப்போய் போற்றி

ஓம் வாழ்வே போற்றி

ஓம் வாழவந்த நாயகி மணாளா போற்றி

ஓம் வானவர் கோனே போற்றி

ஓம் வானில் ஒலியே போற்றி

ஓம் வானில் எழுத்தே போற்றி

ஓம் விகிர்தேசுவரா போற்றி

ஓம் விசயநாதா போற்றி

ஓம் விசாலாட்சி மணாளா போற்றி

ஓம் விடியா விளக்கே போற்றி

ஓம் விடைக் கொடி உடையாய் போற்றி

ஓம் விண்ணரசே போற்றி

ஓம் வித்தே போற்றி

ஓம் விமலநாயகி மணாளா போற்றி

ஓம் விரிகதிர் ஞாயிரானாய் போற்றி

ஓம் விருந்திட்ட வரதா போற்றி

ஓம் விருத்தாம்பிகை மணாளா போற்றி

ஓம் வினை அழிப்போய் போற்றி

ஓம் வீதிவிடங்கா போற்றி

ஓம் வீரட்டேசுவரா போற்றி

ஓம் வீழியநாதா போற்றி

ஓம் வெகுளி அறுப்போய் போற்றி

ஓம் வெங்கதிர் நாயகா போற்றி

ஓம் வெண்ணிக்கரும்பா போற்றி

ஓம் வெண்மதி அணிந்தாய் போற்றி

ஓம் வெண்பாக்க நாதா போற்றி

ஓம் வெள்ளடையப்பா போற்றி

ஓம் வெள்ளை எயிறு உடையவனே போற்றி

ஓம் வெள்ளமாய்க் கரையுமாகி நின்றாய் போற்றி

ஓம் வேகாத் தலையே போற்றி

ஓம் வேண்டாமை வேண்டுவது மில்லாதான் தாள் போற்றி

ஓம் வேங்கைத்தோல் உடுத்தியோனே போற்றி

ஓம் வேதநாயகி மணாளா போற்றி

ஓம் வேதமே போற்றி

ஓம் வேத நாயகா போற்றி

ஓம் வேத நாவுடையாய் போற்றி

ஓம் வேதபுரி ஈசுவரா போற்றி

ஓம் வேத முடிவே போற்றி

ஓம் வேயுறுதோளியம்மை மணாளா போற்றி

ஓம் வேர் எழுத்தே போற்றி

ஓம் வேள்வியே போற்றி

ஓம் வேள்வியின் பயனே போற்றி

ஓம் வேற்கண்ணிநாயகி மணாளா போற்றி

ஓம் வைத்தியநாதா போற்றி

******************************************************

இப்போற்றியை இனிதே தொகுத்துத்தர ஞானமருளிய

அரன் தாள் தஞ்சம்.

*******************************************************

0 Comments: