Wednesday, December 26, 2007

அம்மை ஆயிரம் - 5

அம்மை ஆயிரம் - 5
*********************
ஓம் ஆகமப் பொருளே போற்றி

ஓம் ஆக்கியவை அழிப்பவளே போற்றி

ஓம் ஆங்காரியே போற்றி

ஓம் ஆசு நீக்கி அருள்பவளே போற்றி

ஓம் ஆசைகளை அறுப்பவளே போற்றி

ஓம் ஆசாபாசம் அகற்றுபவளே போற்றி

ஓம் ஆதார சத்தியே போற்றி

ஓம் ஆதார முடிவே போற்றி

ஓம் ஆதியே அந்தமே போற்றி

ஓம் ஆதிரையே போற்றி

ஓம் ஆமாத்தூர் அம்பிகையே போற்றி

ஓம் ஆயிரங் கண்ணாளே போற்றி

ஓம் ஆரணியே போற்றி

ஓம் ஆரா அமுதே போற்றி

ஓம் ஆருயிர்க்கு அகரமே போற்றி

ஓம் ஆலவாய் அழகியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆலகாலியே போற்றி

ஓம் ஆலவூணியே போற்றி

ஓம் ஆவடுதுறை அம்மையே போற்றி

ஓம் ஆவதும் அழிவதும் உன்செயலே போற்றி

ஓம் ஆவுடைநாயகியே போற்றி

ஓம் ஆழியும் ஆகாயமுமானவளே போற்றி

ஓம் ஆளியூர்தியே போற்றி

ஓம் ஆறாதாரத்து ஒளியே போற்றி

ஓம் ஆறு சமயமும் கடந்தவளே போற்றி

ஓம் ஆறு பகையும் அறுப்பவளே போற்றி

ஓம் ஆன்ம விளக்கமே போற்றி

ஓம் ஆன்றோருக்கு அமுதே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி

ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆனந்தியே போற்றி

ஓம் இகபரம் கடந்தவளே போற்றி

ஓம் இகன் மகளே போற்றி

ஓம் இசக்கியே போற்றி

ஓம் இசையே போற்றி

ஓம் இசையின் இனிமையே போற்றி

ஓம் இடர் களையும் அம்மையே போற்றி

ஓம் இடை மருதன் நாயகியே போற்றி

ஓம் இடையாற்று அம்மையே போற்றி

ஓம் இதயத்தில் இருப்பவளே போற்றி

ஓம் இம்மை மறுமை அளிப்பவளே போற்றி

ஓம் இமயவதியே போற்றி

ஓம் இமயவல்லியே போற்றி

ஓம் இமவான் மகளே போற்றி

ஓம் இயக்கியே போற்றி

ஓம் இயக்கமே போற்றி

ஓம் இயங்கும் எழுத்தே போற்றி

ஓம் இயந்திர உருவே போற்றி

ஓம் இயந்திரத்து உட்பொருளே போற்றி

ஓம் இயந்திரத்தின் பலனே போற்றி

ஓம் இரவு பகலற்ற இடமே போற்றி

ஓம் இரப்போர்க்கு ஈயும் இறையே போற்றி

ஓம் இரத்தையே போற்றி

ஓம் இரீங்காரியே போற்றி

ஓம் இருநிதியே போற்றி

ஓம் இருபுலத்தாற் ஏத்தும் தாளடியே போற்றி

ஓம் இருள் புரை ஈசியே போற்றி

ஓம் இருள் கெடுப்பவளே போற்றி

ஓம் இருள்மாயப் பிறப்பறுப்பவளே போற்றி

ஓம் இளங்கொம்பன்னாளே போற்றி

ஓம் இறைவியே போற்றி

ஓம் இறைஞ்சுவாரைக் காப்பவளே போற்றி

ஓம் இன்பக் கடலே போற்றி

ஓம் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி

ஓம் இன்புறு கண்ணியே போற்றி

ஓம் இன்மொழி தந்து அருள்பவளே போற்றி

ஓம் இன்னருள் சுரந்து அருள்பவளே போற்றி

ஓம் இன்னல் தீர்ப்பவளே போற்றி

ஓம் இன்னுயிரே போற்றி

ஓம் ஈகையே போற்றி

ஓம் ஈசானியே போற்றி

ஓம் ஈசுவரியே போற்றி

ஓம் ஈடற்ற தலைவியே போற்றி

ஓம் ஈடில்லா சத்தியே போற்றி

ஓம் ஈமன் மனையாளே போற்றி

ஓம் ஈயென இரவா நிலை தருபவளே போற்றி

ஓம் ஈரேழ் உலகும் காப்பவளே போற்றி

ஓம் ஈன்ற தாயே போற்றி

ஓம் உக்கிர காளியே போற்றி

ஓம் உஞ்சேனைக் காளியே போற்றி

ஓம் உடலின் உயிரே போற்றி

ஓம் உண்ணாமுலையே போற்றி

ஓம் உணர்வே போற்றி

ஓம் உணர்வில் கருத்தே போற்றி

ஓம் உணர்வில் இனியவளே போற்றி

ஓம் உத்தமியே போற்றி

ஓம் உந்தியில் உறைபவளே போற்றி

ஓம் உந்தும் சக்தியே போற்றி

ஓம் உமையே போற்றி

ஓம் உயர் ஞானம் ஊட்டுபவளே போற்றி

ஓம் உயர்நெறி தருபவளே போற்றி

ஓம் உயர்வு அளிக்க வல்லவளே போற்றி

ஓம் உயிரே போற்றி

ஓம் உராசத்தியே போற்றி

ஓம் உருத்திரியே போற்றி

ஓம் உருவே போற்றி

ஓம் உருவுமாய் அருவுமாய் நின்றவளே போற்றி

ஓம் உருவென்று உணரப்படாத மலரடியே போற்றி

ஓம் உலகநாயகியே போற்றி

ஓம் உலகுக்கு உயிரானவளே போற்றி

ஓம் உலகெலாம் படைத்தவளே போற்றி

ஓம் உலகெலாம் காத்து அருள்பவளே போற்றி

ஓம் உலோபம் நீக்கி அருள்பவளே போற்றி

ஓம் உவமை இலாளே போற்றி

ஓம் உள்ளதினுள் எழும் கருவே போற்றி

ஓம் உள்ளத்து ஊறும் தெள்ளமுதே போற்றி

ஓம் உள் உயிர்க்கும் உணவே போற்றி

ஓம் உள்ளொளியே போற்றி

ஓம் உள்ளொளி பெருக்கும் உத்தமியே போற்றி

ஓம் உள்ளுயிர்ப்பே போற்றி

ஓம் உள்ளும் புறமுமாய் நின்றவளே போற்றி

ஓம் உறுபசி அழிப்பவளே போற்றி

ஓம் உறுபிணி ஒழிப்பவளே போற்றி

0 Comments: