Wednesday, December 26, 2007

அம்மை ஆயிரம் - 6

அம்மை ஆயிரம் - 6
*********************
ஓம் ஊக்கம் அருள்பவளே போற்றி

ஓம் ஊர்த்துவத் தாண்டவியே போற்றி

ஓம் ஊழியே போற்றி

ஓம் ஊழித் தொல்வினை அகற்றுபவளே போற்றி

ஓம் ஊழியில் அழியா உத்தமியே போற்றி

ஓம் ஊனே போற்றி

ஓம் ஊனம் நீக்குபவளே போற்றி

ஓம் ஊனின் உள்ளமே போற்றி

ஓம் ஊனினை உருக்கும் உள்ளொளியே போற்றி

ஓம் எக்கணமும் எம்மை ஆள்பவளே போற்றி

ஓம் எங்கும் நிறைந்தவளே போற்றி

ஓம் எண்ணமே போற்றி

ஓம் எண் திசைக்கு அரசியே போற்றி

ஓம் எண்பேறு தரவல்லாளே போற்றி

ஓம் எண்டோளியே போற்றி

ஓம் எண்ணிலா நிதியமே போற்றி

ஓம் எப்பிறப்பும் மறவாமை தருபவளே போற்றி

ஓம் எம்மையே போற்றி

ஓம் எம் உளம் குடி கொண்டவளே போற்றி

ஓம் எம பயம் நீக்குபவளே போற்றி

ஓம் எரியாடி மணாட்டியே போற்றி

ஓம் எல்லா உயிரும் ஆனவளே போற்றி

ஓம் எல்லா உள்ளத்தும் உறைபவளே போற்றி

ஓம் எல்லா நலமும் தரவல்லவளே போற்றி

ஓம் எல்லா வடிவும் எடுத்தவளே போற்றி

ஓம் எல்லாம் அறிந்தவளே போற்றி

ஓம் எல்லைநிறை குணத்தவளே போற்றி

ஓம் எல்லை கடந்த என்னம்மையே போற்றி

ஓம் எல்லை மாரியே போற்றி

ஓம் எலுமிச்சை மாலையாளே போற்றி

ஓம் எவ்வுயிரின் இயக்கமும் நீயே போற்றி

ஓம் எழில் முடியாளே போற்றி

ஓம் எழிலே போற்றி

ஓம் எழுதாச் சொல்லின் எழிலே போற்றி

ஓம் எளியவளே போற்றி

ஓம் என் அம்மையே போற்றி

ஓம் என்னாவி காப்பவளே போற்றி

ஓம் என்மலம் அறுப்பவளே போற்றி

ஓம் என்றும் இன்பம் தழைக்க அருள்பவளே போற்றி

ஓம் ஏக்கம் தீர்ப்பவளே போற்றி

ஓம் ஏக நாயகியே போற்றி

ஓம் ஏகாம்பரியே போற்றி

ஓம் ஏடகத்தரசியே போற்றி

ஓம் ஏடங்கையாளே போற்றி

ஓம் ஏத்துவார் இடர் தீர்ப்பவளே போற்றி

ஓம் ஏந்தி அருள் தருபவளே போற்றி

ஓம் ஏழைக்கு அருள்பவளே போற்றி

ஓம் ஏழுலகாய் நின்றவளே போற்றி

ஓம் ஏற்றம் அருள்பவளே போற்றி

ஓம் ஏற்றிய ஞான விளக்கே போற்றி

ஓம் ஏறேறி ஏழுலகும் வலம் வருபவளே போற்றி

0 Comments: