Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 8

அரன் ஆயிரம் - 8
******************
ஓம் தக்கணா போற்றி

ஓம் தக்கன் தருக்கழித்தாய் போற்றி

ஓம் தடுத்தாட்கொண்ட நாதா போற்றி

ஓம் தத்துவனே போற்றி

ஓம் தத்துவ உரையே போற்றி

ஓம் தத்துவ ஞானமே போற்றி

ஓம் தத்துவம் கடந்த தனிப்பொருளே போற்றி

ஓம் தத்துவமே தானே ஆனோய் போற்றி

ஓம் தந்திரமே போற்றி

ஓம் தர்ப்பாரணியேசுவரா போற்றி

ஓம் தராசத்தி மணாளா போற்றி

ஓம் தருமபுரி ஈசுவரா போற்றி

ஓம் தருமா போற்றி

ஓம் தலைவா போற்றி

ஓம் தலை எழுத்தே போற்றி

ஓம் தவமே போற்றி

ஓம் தவநெறியே போற்றி

ஓம் தவப் பயனே போற்றி

ஓம் தவளவெண்ணகையம்மை மணாளா போற்றி

ஓம் தவசியே போற்றி

ஓம் தழலே போற்றி

ஓம் தளரா மனம் தருவோய் போற்றி

ஓம் தற்பரம்பொருளே போற்றி

ஓம் தன்விதி மீறாத் தலைவா போற்றி

ஓம் தன்னை ஆள்வோன் இல்லானே போற்றி

ஓம் தன்னை வெல்லும் திறனளிப்போய் போற்றி

ஓம் தனக்குவமை இல்லானே போற்றி

ஓம் தனியெழுத்தே போற்றி

ஓம் தாண்டவா போற்றி

ஓம் தாணுலிங்கா போற்றி

ஓம் தாங்கொணா வறுமை அகற்றுவோய் போற்றி

ஓம் தாண்டவா போற்றி

ஓம் தாயனையானே போற்றி

ஓம் தாயிற்சிறந்த தத்துவனே போற்றி

ஓம் தாயுமானவா போற்றி

ஓம் தாழ்சடையோனே போற்றி

ஓம் தாழ்வு வராது காப்போய் போற்றி

ஓம் தான்தோன்றிநாதா போற்றி

ஓம் தானமே போற்றி

ஓம் தானே அனைத்தும் ஆனாய் போற்றி

ஓம் திக்குகள் பத்தாய் விரிந்தாய் போற்றி

ஓம் திகழ்பதி எங்கும் உள்ளாய் போற்றி

ஓம் திசைமுகா போற்றி

ஓம் திரிபுர சுந்தரி மணாளா போற்றி

ஓம் திரிபுரம் எரித்தவா போற்றி

ஓம் திரரையுள் தத்துவம் மறைத்தோய் போற்றி

ஓம் திரு ஆப்பாடியாரே போற்றி

ஓம் திருவடிப் பேறு அருள்வோய் போற்றி

ஓம் திருவே உருவே போற்றி

ஓம் திருக் கயிலாய நாதனே போற்றி

ஓம் திருக்காளத்தியப்பா போற்றி

ஓம் திருக்குழல் நாயகியம்மை மணாளா போற்றி

ஓம் திருக்கோளிலி நாதா போற்றி

ஓம் திருத்துறையூர் நாதா போற்றி

ஓம் திருநந்தீசுவரா போற்றி

ஓம் திருநள்ளாற்றீசா போற்றி

ஓம் திருநிலை நாயகி மணாளா போற்றி

ஓம் திருமடந்தையம்மை மணாளா போற்றி

ஓம் திருப்பயற்று ஈசுவரா போற்றி

ஓம் திருமேனிநாதா போற்றி

ஓம் திரு முதுகுன்று உடையானே போற்றி

ஓம் திருமுண்டீச்சுரா போற்றி

ஓம் திருமுறையே போற்றி

ஓம் திருமூலநாதா போற்றி

ஓம் திருவடியே போற்றி

ஓம் திருவதிகை நாதனே போற்றி

ஓம் திருவிடங்கா போற்றி

ஓம் திருவீரட்டேசுரா போற்றி

ஓம் திருவெண்காட்டு நாதா போற்றி

ஓம் திருவே போற்றி

ஓம் தில்லைவாழ் அம்பலவாணா போற்றி

ஓம் தில்லை நடவரசே போற்றி

ஓம் தீமையும் பாவமும் களைவோய் போற்றி

ஓம் தீயிடை ஒளியே போற்றி

ஓம் தீயிடை வெம்மையே போற்றி

ஓம் தீயில் மூன்றானாய் போற்றி

ஓம் தீர்த்தா போற்றி

ஓம் தீரா வினை தீர்த்தோய் போற்றி

ஓம் தீயினும் வெய்யாய் போற்றி

ஓம் தீவண்ணா போற்றி

ஓம் தீவினை நீக்குவோய் போற்றி

0 Comments: