Wednesday, December 26, 2007

அரன் ஆயிரம் - 7

அரன் ஆயிரம் - 7
******************
ஓம் சாகாக் காலே போற்றி

ஓம் சாதனை செய்வோருக்கு அருள்வோய் போற்றி

ஓம் சாந்தநாயகி மணாளா போற்றி

ஓம் சாம்பலும் பாம்பும் அணிந்தவா போற்றி

ஓம் சாம கண்டா போற்றி

ஓம் சாயா வனேசுவரா போற்றி

ஓம் சிகண்டா போற்றி

ஓம் சிக்கல் தீர்த்தருள்வோய் போற்றி

ஓம் சிங்காரவல்லி மணாளா போற்றி

ஓம் சிணுங்குற்ற வாயா போற்றி

ஓம் சித்தனே போற்றி

ஓம் சித்தத்துள் தித்திக்கும் தேனே போற்றி

ஓம் சித்தியே போற்றி

ஓம் சித்தியின் உத்தியே போற்றி

ஓம் சித்துக்கள் செய்வாய் போற்றி

ஓம் சிதாகாயமே போற்றி

ஓம் சிந்தை தெளிய வைத்தருள்வோய் போற்றி

ஓம் சிந்தையாய் நின்ற சிவனே போற்றி

ஓம் சிந்ததையைச் சிவமாக்குவோய் போற்றி

ஓம் சிந்தையுள் தெளிவாகி நின்றாய் போற்றி

ஓம் சிந்தனைக்கரிய சிவமே போற்றி

ஓம் சிராப்பள்ளிமேவிய சிவனே போற்றி

ஓம் சிலந்திக்கு அரசளித்தவனே போற்றி

ஓம் சிலம்படி போற்றி

ஓம் சிலையானே போற்றி

ஓம் சிவக்கொழுந்தே போற்றி

ஓம் சிவகதி தருவோய் போற்றி

ஓம் சிவகாமி மணாளா போற்றி

ஓம் சிவநெறி நடத்துவோய் போற்றி

ஓம் சிவமே போற்றி

ஓம் சிவயோகநாயகி மணாளா போற்றி

ஓம் சிவலோகனே போற்றி

ஓம் சிவானந்தவல்லி மணாளா போற்றி

ஓம் சிற்றம்பலவாணா போற்றி

ஓம் சிற்றிடைநாயகி மணாளா போற்றி

ஓம் சிறப்பே போற்றி

ஓம் சினம் அறுப்பாய் போற்றி

ஓம் சீர்மல்கு பாடலுகந்தாய் போற்றி

ஓம் சீரெழுத்தாளா போற்றி

ஓம் சீவனே போற்றி

ஓம் சுடர் நயனச் சோதியே போற்றி

ஓம் சுடர்க்கொழுந்தீசுரா போற்றி

ஓம் சுடலையாடி போற்றி

ஓம் சுத்தத் துரியமே போற்றி

ஓம் சுந்தரமே போற்றி

ஓம் சுந்தர விடங்கா போற்றி

ஓம் சுந்தராம்பிகை மணாளா போற்றி

ஓம் சுயம்பு இலிங்கா போற்றி

ஓம் சுரவா போற்றி

ஓம் சுருதி நாயகா போற்றி

ஓம் சுருதிக்கண் தூக்கமே போற்றி

ஓம் சுழல் கண்ணாய் போற்றி

ஓம் சுற்றம் காப்பாய் போற்றி

ஓம் சூக்கும பஞ்சாக்கரமே போற்றி

ஓம் சூலபாணியே போற்றி

ஓம் சூலை தீர்த்து அருள்வாய் போற்றி

ஓம் செங்கணா போற்றி

ஓம் செஞ்சடையோனே போற்றி

ஓம் செஞ்ஞாயிறு ஏய்க்கும் சிவனடி போற்றி

ஓம் செய்வினை அழிப்போய் போற்றி

ஓம் செம்பவளத் திருமேனிச் சிவனே போற்றி

ஓம் செம்பொற்சோதி போற்றி

ஓம் செம்மேனிநாதா போற்றி

ஓம் செல்வநாயகி மணாளா போற்றி

ஓம் செவ்விய ஞானம் தருவோய் போற்றி

ஓம் செறுபகை வெல்வாய் போற்றி

ஓம் சேய் பிழை பொறுப்போய் போற்றி

ஓம் சேவடி சிந்தையில் வைக்க போற்றி

ஓம் சைவா போற்றி

ஓம் சொக்கநாதா போற்றி

ஓம் சொர்ணபுரீசுவரா போற்றி

ஓம் சொர்ணபுரிநாயகி மணாளா போற்றி

ஓம் சொன்னவாற்றறிவார் போற்றி

ஓம் சோதிமின்னம்மை மணாளா போற்றி

ஓம் சோதிக்கும் சோதியே போற்றி

ஓம் சோதியுள் சுடரே போற்றி

ஓம் சோதி வானவா போற்றி

ஓம் சோமகலாநாயகி மணாளா போற்றி

ஓம் சோமேசுவரா போற்றி

ஓம் சௌந்தரேசுரா போற்றி

ஓம் சௌந்தர நாயகி மணாளா போற்றி

ஓம் ஞாலத்து அரசே போற்றி

ஓம் ஞானக் கனலே போற்றி

ஓம் ஞான குருவே போற்றி

ஓம் ஞான வெளியே போற்றி

ஓம் ஞானத்தின் ஒண்சுடரே போற்றி

ஓம் ஞானத்தை நாவில் வைப்போனே போற்றி

ஓம் ஞானப் பெருங் கடலே போற்றி

ஓம் ஞானாம்பிகை மணாளா போற்றி

ஓம் ஞானவல்லியம்மை மணாளா போற்றி

ஓம் ஞானப்பூங்கோதை மணாளா போற்றி

0 Comments: